பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்னி பஸ் கட்டணம் 2 மடங்கு உயர்த்த முடிவு?

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
ஆம்னி, பஸ், கட்டணம், உயர்வு, Private  bus owners association, Private bus, bus fare, increased, TN govt, AIADMK, Tamil Nadu, TN news, TN district, lockdown, curfew, bus services, corona, coronavirus, covid-19, corona outbreak, corona updates, coorn anews, corona cases

சென்னை: ஆம்னி பேருந்து இயக்க நெறிமுறைகளை அரசு அளித்த பிறகே பேருந்து கட்டணம் உயர்வு குறித்து முடிவு செய்யப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டன. தற்போதைய 3ம் கட்ட ஊரடங்கு மே 17ம் தேதியுடன் முடிவடைகிறது. நான்காம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். இதனிடையே பல மாநில அரசுகள், சமூக இடைவெளியுடன் போக்குவரத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news


இந்நிலையில் ஆம்னி பஸ்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தால், டிக்கெட் விலை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு சார்பில் ஆம்னி பஸ் இயக்க அனுமதி வழங்கியதும் தற்போது ஒரு கி.மீ.,க்கு ரூ.1.60 இருக்கும் கட்டணம் ரூ.3.20 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியுடன் கூடிய வகையில் பயணிகளை அமர வைக்க வேண்டும் என்பதாலும், டோல்கேட் கட்டண உயர்வாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர்கள் கூறுகையில், ஆம்னி பஸ்கள் இயக்க நெறிமுறைகளை அரசு, அளித்த பிறகே பேருந்து கட்டணம் உயர்வு குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
14-மே-202022:05:26 IST Report Abuse
m.viswanathan this type of atrocious thing will not happen in country. only in india that too in tamilnadu , worst blackguards
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-மே-202020:16:35 IST Report Abuse
Bhaskaran I.t engineers thavira veru yaarum un vandiyil eraporathillai .ini arasukku laabam
Rate this:
Cancel
Kannan Kannan - Chennai,இந்தியா
14-மே-202020:12:08 IST Report Abuse
Kannan Kannan நாட்டில் முழுவதுமாக இயல்பு நிலை வந்த பிறகு மீண்டும் பழைய கட்டணத்திற்கு குறைக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X