பொது செய்தி

இந்தியா

வீட்டில் இருந்தபடி வேலை; மத்திய அரசு பரிசீலனை

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: முழு கதவைடப்புக்கு பின்னர் வீட்டில் இருந்தபடி ஊழியர்களை வேலை வாங்குவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.latest tamil newsகொரோனா ஊரடங்கால் பலரும் வீட்டுக்குள் முடங்கினர். இதனால் வொர்க் பிரம் ஹோம் முக்கியத்துவம் பெற்றது. சமூக விலகலை கடைபிடிக்கவும், வெளியே வராமல் அலுவலக பணிகள் நடப்பதிலும் இந்த முறை வெற்றி பெற்றது. இந்தியாவில் இதுவரை இந்த முறை பிரபலம் ஆகாமல் இருந்தது. கொரோனாவுக்கு பின் இந்த முறை சாத்தியம் ஆனது.
தனியார் நிறுவனங்கள் முழு அளவில் ஈடுபட்டாலும், அரசு சார்பில் வீட்டில் இருந்தபடி பணியை முழு அளவில் ஈடுபடவில்லை. அதே நேரத்தில் அரசு தரப்பில் மிகப்பெரிய அதிகாரிகள் மத்தியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசித்தல், இதில் இருந்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தல் என பின்பற்றப்பட்டது. இதில் பெரும் வெற்றி கிட்டியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


latest tamil newsஇதன்படி வரும் காலத்திலும் அதாவது ஊரடங்கிற்கு பின்னர் மத்திய அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு ஒரு முறை குறைந்தது 15 நாட்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அனுமதிக்கலாம் என பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் விரும்புகிறது. இதற்கென பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் இது தொடர்பா வரும் 21 ம் தேதிக்குள் கருத்துக்களை அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தபடி பணியாற்றுவதற்கு அரசு சார்பில் வழங்கப்படும் மடிக்கணினியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மத்திய அரசு சார்பில் 48.34 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசின் முடிவுக்கு பலரும் வரவேற்பு அளிப்பதாக கூறுகின்றனர். முதலில் 15 நாட்கள் வழங்கி வீட்டில் இருந்து பணியாற்றும் நாட்களை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
14-மே-202019:06:47 IST Report Abuse
Nallavan Nallavan முதலில் டிஜிட்டல் ஹிட்லரை ஊர் சுற்றாமல் அலுவலகத்தில் இருந்தே CONFERENCE CALL செய்ய சொல்லுங்கள் நிறைய செலவு குறையும், ஏன் எனில் ஊர் சுற்றும்போது கூடவே அதிகாரிகள் என்று பட்டாளம் வேறு ஆகவே நிறய செலவை குறைக்கலாம் ஊருக்கு உபதேசம் வேண்டாமே
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-மே-202018:18:16 IST Report Abuse
g.s,rajan For Politicians also they can work from no publicities,no Austerity measures, cut Down their lavish expitures, reduce their public movements,escorts facilities, Vehicles. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-மே-202016:35:40 IST Report Abuse
Lion Drsekar Welcoming decision. Trade union representatives also can be requested to work for the people from home at least from now on wards. Vandhe madaram
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X