பொது செய்தி

இந்தியா

கொரோனா ஆய்வகத்தில் உருவானது: நிதின் கட்காரி

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Nitin Gadkari, Road transport minister, wuhan, china, wuhan market, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, corona spread, laboratory, corona vaccine, union minister, நிதின் கட்காரி, கொரோனா, கொரோனாவைரஸ், ஆய்வகம்,  கோவிட்-19

புதுடில்லி: கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் இருந்து பரவியது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
தனியார் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா வைரசுடன் வாழ்வதற்கு நாம் கற்று கொள்ள வேண்டும். இது இயற்கையாக உருவான வைரஸ் அல்ல. ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்த வைரஸ், பல உலக நாடுகளை பாதித்துள்ளது. கொரோனா வைரசுக்காக தடுப்பு மருந்துகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைக்கு வைரசை தடுக்கும் மருந்து இல்லை. அது கிடைத்தால் மட்டுமே பிரச்னையில் இருந்து நம்மால் முழுமையாக வெளியே வர முடியும். கொரோனா வைரசுக்கு விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.


latest tamil newsஅதற்கு அடுத்த பிரச்னை, கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பதை கண்டுபிடிப்பது. சிலருக்கு அறிகுறியே இல்லாமல் தொற்று ஏற்படுகிறது. இதனால், தொற்றை கண்டறியும் எளிய வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு காரணம், இந்த வைரஸ் இயற்கை வைரஸ் அல்ல. ஆய்வகத்தில் இருந்து பரப்பப்பட்டது.
இதனை உலகமும், இந்தியாவும் எதிர்கொள்வதற்கு தயாராகிவிட்டார்கள். விஞ்ஞானிகளும் தயாராகிவிட்டனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், நாம் பொருளாதார பிரச்னையையும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்தியா ஏழை நாடு. நம்மால், மாதக்கணக்கில் ஊரடங்கை தொடர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மே-202019:27:58 IST Report Abuse
வந்தே மாதரம் அதன் பெயரிலேயே விளக்கம் உள்ளதே C-China, O-origin,V-Virus,I-in,D-December, 19-2019
Rate this:
Cancel
R.Kalyanaraman - Chennai,இந்தியா
14-மே-202019:10:48 IST Report Abuse
R.Kalyanaraman No doubt about it Gadkari sir. It is d by China at their Wuhan lab and leaked. They China suspended local flights from Wuhan but allowed all International flights from and To Wuhan. China is unbelievable Rogue Country.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-மே-202018:53:39 IST Report Abuse
தமிழ்வேல் இந்தியா ஏழை நாடு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X