பொது செய்தி

இந்தியா

ஓராண்டுக்கு 30 சதவீத சம்பளத்தை விட்டு கொடுக்க ஜனாதிபதி முடிவு

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
ராம்நாத்கோவிந்த், ஜனாதிபதி, சம்பளம், President, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, Ramnath Kovind, salary, India, indian president, covid-19 pandemic,

புதுடில்லி: அடுத்த ஒராண்டிற்கு தனது சம்பளத்தில் 30 சதவீதத்தை அரசிற்கு விட்டு கொடுக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு கூடுதல் நிதி கிடைக்கும் வகையில் தனது சம்பளத்தில் 30 சதவீதத்தை, ஒரு வருடத்திற்கு விட்டு கொடுக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார். தனது பயணம் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஆகும் செலவை குறைக்கவும் முடிவு செய்துள்ளார். சமூக விலகல் விதியை பின்பற்றவும், செலவை குறைக்கும் வகையில் உள்நாட்டு பயணத்தை குறைத்து கொள்ள முடிவு செய்துள்ளதுடன், தொழில்நுட்ப உதவியுடன் மக்களை சந்திக்கவும் முடிவு செய்துள்ளார்.


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அடுத்த ஓராண்டுக்கு தனது சம்பளத்தில் 30 சதவீதத்தை அரசுக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் நிதி கிடைக்கும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அத்துடன், தமது பயணம் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கான செலவுகளை குறைக்கவும் திட்டமிட்டுள்ளார்

latest tamil news
ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சொகுசு கார் வாங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஜனாதிபதி மாளிகை மற்றும் அரசிடம் உள்ள வசதிகளை பயன்படுத்தி கொள்ளப்படும். வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் விருந்து நிகழ்ச்சிகள் குறைக்கப்படும். நிகழ்ச்சிகளில் குறைந்தளவு விருந்தினர்கள் அழைக்கப்படுவதுடன், அதன் மூலம் சமூக இடைவெளி கடைபிடிப்பது, பூக்கள், அலங்காரம், உணவு ஆகியவற்றின் தேவை குறையும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம், பிரதமர் நிவாரண நிதிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒரு மாத சம்பளத்தை விட்டு கொடுத்திருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Kirubakaran - Doha,கத்தார்
14-மே-202020:30:06 IST Report Abuse
G.Kirubakaran Great gesture from first citizen of India.
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் first you reduce your office/ house staff nearly 600 for your office and house
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
14-மே-202018:36:06 IST Report Abuse
பாமரன் சூப்பர் ஸார் சூப்பர் சூப்பர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X