கொரோனா பாதித்த சிறுவர்களுக்குப் பரவும் வித்தியாசமான நோய்; பிரிட்டன் டாக்டர்கள் எச்சரிக்கை

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020
Share
Advertisement
British, UK, coronavirus, corona, corona outbreak, corona updates, corona news, corona cases, Children, Police, Mysterious, Inflammatory, Disease, health, COVID-19, கொரோனா, வைரஸ், சிறுவர்கள், நோய், பிரிட்டன்

லண்டன்: கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்துக்கொண்டு இருக்கும் இந்த வேளையில் வித்தியாசமான ஓர் வீக்கம் காரணமாக பிரிட்டனின் நூற்றுக்கணக்கான சிறுவர்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்டதா என பிரிட்டன் மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஐந்து முதல் 15 வயதுள்ள சிறார்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.


latest tamil news


கொரோனா தாக்கப்பட்ட சிறுவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகவும் அரிதான ஒரு நோய் என குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், கொரோனா தாக்கம் சிறுவர்களது உடலில் வேறு மாதிரியான மாற்றங்களை உண்டாக்குகிறதா என ஆய்வு செய்து வருகின்றனர். கவாசகி நோய் எனப்படும் அரிய நோய் குழந்தைகள் வாயில் புண்கள், தோலில் கட்டிகளை ஏற்படுத்தும். இதனுடன் இந்த வீக்கத்துக்கு தொடர்பு இருக்கக்கூடுமோ என டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தலைநகர் லண்டனில் 18 குழந்தைகள் இந்த அரிய வகை நோயினால் பாதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஆனால் இதற்கும் கொரோனாவுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளதா இல்லையா என டாக்டர்கள் இன்னும் நிரூபிக்கவில்லை. இந்த வீக்கம் சிறுவர்களது நுரையீரலை பாதிக்கவில்லை. ஆனால் கோவிட்-19 நுரையீரலை நேரடியாக பாதிக்கிறது.


latest tamil news


விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, கொரோனா தாக்கம் காரணமாக சிறுவர்களது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என கூறுகின்றனர். இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த பாதிப்பு கொரோனா பாதித்த சிறுவர்களிடையே காணப்படுகிறது. நியூயார்க் நகரில் 100 சிறுவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். டாக்ஸின் ஷாக் சிண்ட்ரோம் எனப்படும் நோய், வாயில் புண் ஏற்படுத்தும். இதனுடன் இந்த நோய்க்கு தொடர்புள்ளதா எனவும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.


latest tamil news


இது குறித்து லண்டன் குழந்தைகள் நல மருத்துவர் லிஸ் விட்டகர் கூறுகையில், மிக அரிதான இந்நோய் குறைவான அளவிலேயே குழந்தைகளைத் தாக்குகிறது. இதற்கு ஐஸ் பெர்க் எபெக்ட் என மருத்துவத் துறையில் பெயர் உண்டு. இதுகுறித்து ஆய்வு நடந்து வருகிறது. அதீத வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு இந்த நோயின் ஆரம்ப அறிகுறியாக உள்ளது என அவர் கூறினார். இந்த வீக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் மிகச் சிறிய அளவினருக்கு இதயம் பாதிக்கப்படுகிறது. இவர்களது நிலைதான் தற்போது மிக மோசமாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறார்களில் பெரும்பாலானோர் ஒன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X