சீனாவுக்கு எதிராக கருத்து: காங்., மீண்டும் 'பல்டி'

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
Congress, Adhir Ranjan, Delete Tweet, Against, China, Anand Sharma, congress leader, Indian Army,  Rajya Sabha MP,  Indian National Congress, countries, காங்கிரஸ், ஆதிர்ரஞ்சன், டுவிட், சீனா, ஆனந்த்சர்மா

புதுடில்லி: இந்திய எல்லையில் அத்துமீற முயன்ற சீனாவுக்கு எதிராக லோக்சபா காங்., தலைவரும், எம்.பி.,யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார். பின்னர் தலைமையின் அழுத்ததால் டுவிட்டர் பதிவை நீக்கியது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சிக்கிமில் சீன வீரர்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக புகார் எழுந்தது.இதையடுத்து, எல்லை பகுதியில் இருந்த இரு நாட்டு வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு, சில வீரர்கள் காயம் அடைந்தனர். இது தொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் ' சீனாவே கவனமாக இருங்கள். உங்களை போன்ற விஷ பாம்புகளை எப்படி கையாள்வது என்று இந்தியப் படைகளுக்கு தெரியும். மஞ்சள் விரிவாக்கவாதியின் மோசமான வடிவமைப்பை முழு உலகமும் பார்த்து கொண்டிருக்கிறது. தைவானுக்கு எவ்வித தாமதமின்றி தூதரக அந்தஸ்து வழங்குமாறு நான் அரசாங்கத்தை பரிந்துரைக்கிறேன்' என பதிவிட்டிருந்தார்.


latest tamil news




காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல


ஆதிர் ரஞ்சனின் டுவிட்டர் பதிவை தொடர்ந்து மூத்த காங்., தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ஆனந்த் சர்மா, ‛இந்தியா - சீனா இடையேயான சிறப்பு கூட்டாட்சி தத்துவத்தை இந்திய தேசிய காங்கிரஸ் அங்கீகரித்து மதிப்பிடுகிறது. இரண்டு பண்டைய நாகரிகங்கள் மற்றும் உலகின் பெரிய பொருளாதாரங்கள் என, இரு நாடுகளும் 21ம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்து வருகின்றன. மேலும், சீனா குறித்த காங்., லோக்சபா தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து. காங்.,கட்சியின் கருத்தை பிரதிபலிக்காது' எனவும் பதிவிட்டார்.


latest tamil news


சர்மாவின் கருத்தை விமர்சித்துள்ள பா.ஜ.,மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி, ‛அடித்து நொறுக்கிய ரஞ்சன், பின்னர் டுவிட்டை நீக்கி மோசமாக பின்வாங்கினார்' என கூறியுள்ளார்.


காங்கிரசுக்கு இது புதிதல்ல

கடந்த 2017ம் ஆண்டு சீனாவும் இந்தியாவும் டோக்லாம் பகுதியில் மோதலில் ஈடுபட்டபோது, ராகுல், சீனத் தூதர் லூவோ ஜாஹூயை சந்தித்தார். இரு தரப்பிலிருந்தும் சந்திப்பு நடக்கவில்லை என மறுத்த பின்னர், காங்., செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ராகுல், சீன தூதரை சந்தித்தது உண்மை தான் என ஒப்புக் கொண்டார். அவருடன் பூடான் தூதரும் முன்னாள் என்எஸ்ஏ தலைவருமான சிவசங்கர் மேனனையும் சந்தித்தார் என்று பேட்டியளித்திருந்தார்.
சீனத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடந்தது என்பதையும், தற்போதைய இருதரப்பு உறவுகள் குறித்த கருத்துப் பரிமாற்றம் என்பதையும் முதலில் அறிக்கையாக வெளியிட்டது. பின்னர் சில மணிநேரங்களுக்குப் பிறகு அதை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - chennai,இந்தியா
14-மே-202021:15:19 IST Report Abuse
rajan During Nehru 's period only, india was raided by China and encroached huge Indian soil. Nehru listened to Indian communists like VKKrisna menon and failed. Is congress playing National safety for their selfishness? Do they want to make India as an integral part of China? This is too much. Better Rahul can go to Wauhan now itself and draft a surrer note.
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
14-மே-202020:56:10 IST Report Abuse
thulakol we have to demolish congress party
Rate this:
Cancel
14-மே-202020:29:24 IST Report Abuse
மதுமிதா கைக்கு கட்டுபட்டு அதான் உங்களுக்கு தெரியுமே அப்படின்னு சொல்ல ட்ரெய்னிங்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X