பொது செய்தி

இந்தியா

சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு திட்டம்: நிர்மலா

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
BJP, Nirmala, Nirmala Sitharaman, FM, Finance Minister, Aatm Nirbhar Abhiyan, special package, corona package, India self-reliant, நிர்மலா,நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயன்பெற, ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வழங்கும் சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்ய தேசிய அளவில் குழு உருவாக்கப்படும். தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம்(இஎஸ்ஐ) அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் இதனை பயன்படுத்தலாம். 10க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள், விருப்பப்பட்டால், இந்த திட்டத்தில் இணையலாம். ஆகஸ்ட்க்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் 83 சதவீதம் அமல்படுத்தப்படும். இதனால், 23 மாநிலங்களில் 67 கோடி பேர் பயனடைவார்கள். வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்தவாடகையில் வீடு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும். இதற்காக தொழிற்சாலைகளுக்கு சலுகை அளிக்கப்படும்.


latest tamil news


முத்ரா திட்டத்தில் வட்டி சலுகைக்காக ரூ.1,500 கோடி செலவு செய்யப்படுகிறது. முத்ரா திட்டத்தில் குறித்த காலத்தில் கடனை திருப்பி செலுத்துவோருக்கு 2 சதவீத வட்டி சலுகை வழங்கப்படும். முத்ரா சிஷூ திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்களுக்கு சலுகை வழங்கப்படும்.சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்க சிறப்பு திட்டம் அமல் படுத்தப்பட உள்ளது. அவர்களுக்கு கடன் வழங்குவதற்காக 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கடனுதவியால் 50 லட்சம் வியாபாரிகள் பயனடைவார்கள்.ரூ.10,000 தொடக்க மூலதனத்துடன் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்படும்.சாலையோர வியாபாரிகள் டிஜிட்டல் முறையில் கடனை திருப்பி செலுத்தினால், பரிசு வழங்கப்படும். கூடுதலாக கடன் பெறவும் வாய்ப்பளிக்கப்படும். இவ்வாறு நிர்மலா கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
14-மே-202022:29:14 IST Report Abuse
Rajas மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. இதில் எங்கே மக்கள் சாலையோர கடைகளில் வாங்க போகிறார்கள். பொருளாதாரம் உருக்குலைந்து இருக்கும் இந்த காலகட்டத்தில் வங்கிகள் எப்படி வியாபாரிகளுக்கு கடன் கொடுக்கும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-மே-202022:20:05 IST Report Abuse
Lion Drsekar 70 ஆண்டுகளாக எந்த கடன் வாங்கினாலும் ஏமாற்றவேண்டம் என்பதையே தாரக மந்திரமாக உருவேற்றி வந்த இயக்கங்கள் திருப்பித்தர எந்த அளவுக்கு ஒத்துழைப்பார்கள் என்று தெரியவில்லை, எல்லாவற்றிற்கும் பின்னால் கழகங்கள் இருக்கின்றன, இயக்கங்கள் இருக்கின்றன, ஆகவே அரசு நல்லது செய்தாலும், மக்கள் நியாயமாக நடக்க விரும்பினாலும், சமூக அமைப்புகள் நேர்மையாக இயங்க அனுமதிக்காது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
14-மே-202022:19:54 IST Report Abuse
Abbavi Tamilan இருபது லட்சம் கோடியில் இதுவரை ஒரு பைசா அவிழ்க்க வேண்டியதில்லை ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் செலவினங்களை இந்த பேக்கேஜின் கீழ் அறிவிக்கப்பட்டு வருகிறது இது தான் வாயிலேயே வடை சுடுவது. வெறும் கையிலே மூலம் போடுவது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X