அரசுக்கு கருத்து கூறிய 5 லட்சம் பேர்: கெஜ்ரிவால்

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Arvind Kejriwal, Delhi, Lockdown, 5 Lakhs, Suggestions, Delhi CM, Kejriwal, coronavirus, coorna, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, corona in delhi, india, india fights corona, டில்லி, முதல்வர், அரவிந்த்கெஜ்ரிவால், ஊரடங்கு, கருத்து,

புதுடில்லி: ஊரடங்கு நீட்டிப்பது அல்லது தளர்வு குறித்து அரசுக்கு 5 லட்சம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா, குஜராத், தமிழகத்திற்கு அடுத்தபடியாக டில்லி உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மே 17ம் தேதியுடன் 3ம் கட்ட ஊரடங்கு முடியவுள்ள நிலையில், அதன் பிறகு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், தளர்வுகள் குறித்து டில்லி அரசுக்கு மக்கள் கருத்து கூறலாம் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.


latest tamil news


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது: ஊரடங்கினை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இதுவரை 5 லட்சம் டில்லி மக்கள், அரசுக்கு கருத்து தெரிவித்துள்ளனர். வணிக அமைப்புகளிடம் இருந்தும் எங்களுக்கு பல ஆலோசனைகள் வந்துள்ளன. அதில், ஒற்றைப்படை, இரட்டைப்படை அடிப்படையில் சந்தைகளை திறக்க அனுமதிக்கும் படி கோரியிருந்தனர். சிலர், பேருந்து சேவைகளை இயக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பல அலுவலகங்கள் தற்போது இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, அனைவரிடமும் சொந்த வாகனம் கிடையாது. அவர்களுக்கு பொது போக்குவரத்து தேவை. அவர்கள் எப்படி அலுவலகம் சென்றடைவார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் குறைந்த அளவில் மெட்ரோ ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இது குறித்து ஆலோசனை செய்வோம். பெரும்பாலானோர் சமூக விலகல்களை கடைபிடிக்காதவர்கள் மீதும், முகக்கவசம் அணியாதவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
14-மே-202019:57:43 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN Very Good... திருமிகு பாரத பிரதமர் கையாளும் உத்தியை கையாண்டுள்ளார் பாராட்டுகள். எதிரிக்கும் மதிப்பளிக்கும் அன்பனே நண்பன் ஆவான். செயல் வெற்றியடைய இதுவே முதற்படி வாழ்க வளர்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X