பொது செய்தி

இந்தியா

மோடியின் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்திற்கு ஐ.நா பாராட்டு

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
UN, India, Revive Economy, Economic Experts, Stimulus Package, United Nations, Aatma Nirbhar Abhiyan, special package, praise, hails, coronavirus, corona, covid-19, Corona outbreak, corona updates, corona news, Indian economy, PM Modi, Nirmala sitharaman, Finance minister, Narendra Modi, இந்தியா, பொருளாதாரம், ஐநா, பாராட்டு

புதுடில்லி: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை புதுப்பிக்க வளரும் நாடுகள் தங்கள் ஜி.டி.பி.,யில் ஒரு சதவீதத்தை அளிக்கவே யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா ரூ.20 லட்சம் கோடி திட்டத்தை அறிவித்திருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது என ஐ.நா பொருளாதார வல்லுநர்கள் பாராட்டியுள்ளனர்.


latest tamil news


பிரதமர் மோடி செவ்வாயன்று ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு தொகுப்பை அறிவித்தார். இதன் மூலம் குறு,சிறு நிறுவனங்கள், வரி செலுத்துபவர்கள், விவசாயிகள், முறைசாரா தொழிலாளர்கள் என பலருக்கும் நிதி சலுகைகள் கிடைக்கும். இந்த நிலையில் ஐ.நா.,வின் ஒரு துறையான உலக பொருளாதார கண்காணிப்பின் கிளை தலைவர் ஹமீத் ரஷீத்திடம் இந்திய அரசு அறிவித்த பொருளாதார ஊக்குவிப்பு தொகுப்பு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய அவர், இது மிகவும் வரவேற்கத்தக்க வளர்ச்சி. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமான ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு என்பது வளரும் நாடுகளில் இதுவரை மிகப்பெரியது. ஏனெனில் பெரும்பாலான வளரும் நாடுகள் 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரையிலான ஊக்குவிப்பு தொகுப்புகளையே உருவாக்கி வருகின்றன. இந்தியாவின் ஊக்குவிப்பு தொகுப்புகள் மிகப் பெரியவை. இப்பெரிய திட்டத்தை செயல்படுத்தும் அளவிற்கு உள்நாட்டு நிதிச் சந்தையும், பெரிய திறனும் இந்தியாவுக்கு உள்ளது. இதன் தாக்கம் திட்ட வடிவமைப்பைப் பொறுத்தே அமையும் என்றார்.


latest tamil news


ஐ.நா.,வின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை அதிகாரி ஜூலியன் ஸ்லாட்மேன் அளித்த பேட்டியில், இந்தியாவின் பொருளாதார தொகுப்பின் அளவு சிறப்பானது. இந்த திட்டம் சந்தைகளுக்கு உறுதியளிப்பதற்கும் உள்நாட்டு நுகர்வை அதிகரிப்பதற்கும் உதவும். ஆனால் அதே நேரத்தில் மக்கள் செலவழிக்க முடியாத நிலையில், பொருளாதார வளர்ச்சி திடீரென்று மாயமாக மீண்டும் தோன்றும் என்று எதிர்பார்க்க முடியாது என்றவர்,

இந்தியாவின் வைரஸ் எண்ணிக்கை குறைவாக இருந்த போதே ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தியதால் வைரஸ் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் பாராட்டினார். மேலும், இந்தியாவில் முதலில் நிச்சயமற்ற தன்மையைக் குறைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும், இதனால் மக்கள் வெளியே சென்று மீண்டும் செலவிட முடியும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannan rajagopalan - Chennai,இந்தியா
14-மே-202020:23:34 IST Report Abuse
kannan rajagopalan They understand. They don't need to do politics. Hence they appreciate. Here it is more politics and lesser understanding or refusal to understand.
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
14-மே-202020:07:45 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஆற்றல் அறிவு ஆன்மீக ஜீவ காருண்யமிக்க பா.ஜ.க. அப்படித்தான் பிற நாட்டவர் மெச்ச தகுந்த வியூக நடவடிக்கைகளை கையாண்டு ஆட்சி நிர்வாகம் செய்து வருகிறது. ஆனால் ஊழல் பெருச்சாளிகளுக்கு போறாமை எண்ணம் கொண்டு உளருகிறது மலையை பார்த்து , .... போல் எண்ணி மலை போல் நின்று செயலாற்றுகிறது பா.ஜ.க. எனலாம்.
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
14-மே-202019:10:21 IST Report Abuse
dina paa. sei yennathe economic pattri london le padichare
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X