பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 9,674 பேருக்கு கொரோனா: 66 பேர் பலி

Updated : மே 15, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
தமிழகம், கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19, சுகாதார அமைச்சர், விஜயபாஸ்கர்,

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 14) புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆகவும், பலி எண்ணிக்கை 66 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 253 ஆண்கள் மற்றும் 194 பெண்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 64 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2,240 ஆக உள்ளது. சென்னையில் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7365 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


latest tamil news


இந்தியாவிலேயே அதிக பரிசோதனை மையங்களை கொண்டதாக தமிழகம் உள்ளது. 38 அரசு மற்றும் 20 தனியார் மையங்கள் என 58 சோதனை மையங்கள் மூலம் இன்று மட்டும் 11,965 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 2,92,432 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மொத்தம் சோதனையிடப்பட்ட 19 லட்சம் மாதிரிகளில் தமிழகத்தில் தான் அதிகமாக 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. நாட்டிலேயே 0.68 சதவீதம் என்ற குறைந்த இறப்பு விகிதத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. அதற்கு சிறந்த சிகிச்சை முறைகளே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
15-மே-202015:03:49 IST Report Abuse
S. Narayanan நம் மருத்துவர்களின் உழைப்பு மற்றும் அரசின் நடவடிக்கைகள் மேலும் மக்களின் பொறுப்புணர்ச்சி விரைவில் கொரோனவை விரட்டி விடும்.
Rate this:
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி மருத்துவ துறையில் முன்னேற்றம் கண்ட நாடுகளே கொரோனாவிடம் திணறும் போது ஏதோ ஒரு பேச்சுக்காக ஒரு அமைச்சர் மூன்று நாட்களில் அடங்கும் என்ற அரசியல் சொல்லை உண்மை என்று நம்பிய தமிழனின் அறியாமையை என்ன சொல்ல.
Rate this:
Cancel
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
15-மே-202014:26:33 IST Report Abuse
R KUMAR விரைவில் 10000 - த்தை தாண்டி ஒரு சாதனை செய்துவிடுவோம் என்று நம்புகிறேன். அரசு என்னன்னவோ செய்து கொண்டிருக்கிறது. மருத்துவக்குழுவும் முயன்றுதான் பார்க்கிறது. ஆனால் இயற்கையின் விளையாட்டு மிகவும் தீவிரமாகத்தான் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X