பொது செய்தி

தமிழ்நாடு

கோவை ரவுண்ட் அப்: கோவை, திருப்பூரில் தொற்று பாதிப்பு இல்லை

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020
Share
Advertisement
 கோவை ரவுண்ட் அப்: கோவை, திருப்பூர், தொற்று பாதிப்பு இல்லை, coimbatore, tirupur, TN district, TN news, Tamil Nadu, TN, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, india, corona in TN, corona spread, new corona cases, positive cases, TN fights corona, India fights corona

கோவை:கோவையில், 'கொரோனா' தொற்று இல்லாத நிலையில், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில், 146 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் சென்னையில் உயிரிழந்தார். மற்ற அனைவரும் உடல்நலம் பெற்று வீடு திரும்பினர். இவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தொடர்ந்து, 10 வது நாளாக கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதனால் சுகாதார துறையினர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

கோவையில், 26 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. இவை படிப்படியாக விடுவிக்கப்பட்டு, தற்போது மூன்று இடங்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்து வருகின்றன.


latest tamil news





வீட்டு கண்காணிப்பில் 1,466 பேர்



திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதித்த, 114 நபர்களும் குணமாகிவிட்டனர். கடந்த, 12 நாட்களாக புதிய கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை. கட்டுப்பாட்டு மண்டலங்கள், இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வருவோர், வீட்டு கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.
மாவட்டத்தில், 1,466 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்; தொடர்ச்சியாக, 14 நாட்கள் கண்காணிப்பில் வைத்த பிறகே, இயல்பு நிலைக்கு திரும்புவர் என, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X