70 சதவீத கொரோனா உயிரிழப்புகளை மறைக்கும் ரஷ்யா| Russia's Covid death toll 70% higher than official figure | Dinamalar

70 சதவீத கொரோனா உயிரிழப்புகளை மறைக்கும் ரஷ்யா

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (4)
Share
மாஸ்கோ: ரஷ்யாவில் இதுவரை, சுமார் 2.52 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 53,530 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 2,305 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழ்துள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்திலிருக்கும் ரஷ்யாவில், இறப்பு விகிதம் மட்டும் எப்படி இவ்வளவு

மாஸ்கோ: ரஷ்யாவில் இதுவரை, சுமார் 2.52 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 53,530 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 2,305 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழ்துள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.latest tamil news
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்திலிருக்கும் ரஷ்யாவில், இறப்பு விகிதம் மட்டும் எப்படி இவ்வளவு குறைவாக உள்ளது என்ற கேள்வியை பல்வேறு தரப்பினரும் எழுப்பி வருகின்றனர்.


latest tamil news'கொரோனா வைரஸ் தோற்று ஏற்பட்டவுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களில், 70 சதவீதம் பேருக்கு, ஏற்கனவே மிகவும் மோசமான வேறு உடல்நல பாதிப்புகள் இருந்துள்ளன. இதனால் பெரும்பாலான உயிரிழப்புகளை கொரோனா வைரஸ் மரணங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை' என, ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


latest tamil news
'ரஷ்ய அரசு தெரிவிக்கும் கொரோனா உயிரிழிப்பு விவரங்கள் முற்றிலும் பொய்யானது. அங்கு 70 சதவீத உயிரிழப்புகள் மறைக்கப்பட்டிருக்கலாம்' என, வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X