பொது செய்தி

இந்தியா

மத போதகர் ஜாகீர் நாயக்கை நாடு கடத்த மலேசியாவிற்கு இந்தியா கோரிக்கை

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
கோலாலம்பூர் : இந்தியாவால் தேடப்படும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கை நாடு கடத்தி கொண்டுவருவதற்கான முறையான கோரிக்கையை மலேசிய அரசுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.மும்பையைச் சேர்ந்த மத போதகர் ஜாகீர் நாயக் 53. வங்கதேச தலைநகர் டாக்காவில் 2016-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவன், தாம் ஜாகீர் நாயக்கின், பேச்சில் கவரப்பட்டு தாக்குதல் நடத்தியதாக
 India, ஜாகீர் நாயக்,நாடு கடத்த மலேசியா, இந்தியா கோரிக்கை, Malaysia, Zakir Naik, National Investigation Agency, NIA, govt of india, central government

கோலாலம்பூர் : இந்தியாவால் தேடப்படும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கை நாடு கடத்தி கொண்டுவருவதற்கான முறையான கோரிக்கையை மலேசிய அரசுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.

மும்பையைச் சேர்ந்த மத போதகர் ஜாகீர் நாயக் 53. வங்கதேச தலைநகர் டாக்காவில் 2016-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவன், தாம் ஜாகீர் நாயக்கின், பேச்சில் கவரப்பட்டு தாக்குதல் நடத்தியதாக கூறியதையடுத்து, ஜாகீர் நாயக்கை கைது செய்து விசாரணை நடத்துமாறு வங்கதேச அரசு இந்தியாவிடம் கோரிக்கை வைத்தது.


latest tamil newsஇதையடுத்து ஜாமீர் நாயக் மீது பயங்கரவாத செயல்களில் ஈடுபட துாண்டியது மற்றும் கறுப்பு பண மோசடி உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2016 -ம் ஆண்டு இந்தியா விட்டு வெளியேறி மலேசியாவில் தஞ்சமடைந்தார். அங்கு நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவரை மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஜாகீர் நாயக்கை நாடு கடத்தி இந்தியா கொண்டுவருவதற்கான முறையான கோரிக்கையை மலேசிய அரசுக்கு மத்திய அரசு இன்று அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக தன்னை இந்தியா அனுப்பி வைத்தால் விசாரணை நியாயமாக நடைபெறாது என ஜாகீர் நாயக் கருதுவதால் அவரை நாடு கடத்த மாட்டோம் என கடந்த ஆண்டு மலேசிய அரசு மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-மே-202022:16:52 IST Report Abuse
Lion Drsekar நம் நாட்டிலேயே நாடு கடத்தவேண்டிய பல சமூக விரோதிகள் இருக்க எதற்கு அந்த ஒரு ஆளை மட்டுமே குறிவைப்ப்பது, பல புனைப்பெயர்களில், ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் மிகவும் தரம் தாழ்ந்த நிலைகளில் தங்களின் கருத்துக்கள் என்ற பெயர்களில் உண்மையான முகத்தை காட்டும் மனித உருவில் இயங்கும் ,,,, வேண்டும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
14-மே-202022:06:03 IST Report Abuse
anbu இந்த சாக்கடை நாய் இங்கே கொண்டு வந்து நம்ம பணத்தில் சாப்பாடு போடாமல் நேரே வங்க தேசத்துக்கு அனுப்பி விடவும். அங்கே தான் முறையான விசாரணை , தண்டனை கிடைக்கும். இங்கே சுடலை & கோ , கம்மீஸ், கருப்புசட்டை காளான்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் மற்றும் கூடாரங்கள் யாவும் ஒரே கூட்டாக அவனை ஒரு அப்பிரானியாக பிரகடனம் செய்து பிரியாணி விருந்து கொடுத்து பராமரிக்க வேண்டும் என போராடுவார்கள். இவனுக்கு வங்க தேசம் தான் சரியான விருந்து படைக்கும்.
Rate this:
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
14-மே-202020:47:08 IST Report Abuse
krishna Indha desa virodha moorga veryanukku kooda local moorganunga uhura koduthu muttu koduppanuga.Adhoda idhukku kooda namma murasoli tasmac mattaigal mudiyattum tholvi kodi dhendacon paamaran virus killer pondra desa virodha ennam konda jenmangal muttu koduthu poi ksruthu podum.Aamam idhai edhirthu udan desa virodha kollayar koodaram Congress Antonio mainova sudalai khan mamatha begum ellam ippo koova aarsmbipanga paaru.Indha naadharigalukku Zahir Naik miga periya hero.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X