கொரோனாவால் பாதிக்கப்படும் இயற்கை மற்றும் வனவிலங்குகள்..!

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கொரோனா தாக்கம் இயற்கைக்கு பல நன்மைகள் செய்துள்ளது, மக்கள் ஊரடங்கால் டால்பின்கள் கரைக்கு வருகின்றன. காற்று மாசு இல்லாததால் பறவைகள் சுதந்திரமாக வெளியே உலவுகின்றன.latest tamil newsமேலும் நீர் மாசு குறைந்துள்ளது. வனப்பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வன விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன என பல செய்திகளை சமீபத்தில் படித்து இருப்போம்.

ஆனால் கொரோனாவால் இயற்கைக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் இன்னல்கள் குறித்து நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவை என்னென்ன என ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?கொரோனா தாக்கம் காரணமாக தென்னாப்ரிக்காவில் வாழும் கொரில்லாக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மனிதர்களின் டிஎன்ஏ போலவே இவற்றுக்கும் டிஎன்ஏ தகவமைப்பு உள்ளது. இவற்றுக்கு கொரோனா மனிதர்களிடமிருந்து பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது.
தென்அமெரிக்காவின் கொலம்பியா பகுதியில் ஊரடங்கு காரணமாக வனத்துறை செயல்படவில்லை. இதனால் ஜாகுவார் உள்ளிட்ட அரிய மிருகங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன. இந்தோனேசியா அருகே மீன் பிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகளில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இதனைத் தடுக்க முடியாமல் அரசு முடங்கிக் கிடக்கிறது. பேரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. இந்த கடத்தல் கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil newsதென்னாப்ரிக்கா, கென்யா நாடுகளில் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலாத் துறை அதிக லாபம் ஈட்டும். இது தற்போது தடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை வனவிலங்குகள் பாதுகாப்புக்குப் பயன்படுத்தப்படும். ஆனால் இது தற்போது தடைபட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
14-மே-202019:47:45 IST Report Abuse
Arachi Human beings are also classified under Animal Kingdom. There will be no second thought for us to accept that of all the animals human beings are the worst animals to pollute the environment and now it is proved that
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X