பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா அதிகரிப்பு குறித்து அச்சப்பட வேண்டாம்: மருத்து நிபுணர்கள்

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
covid 19, corona virus, not panic, Medical Experts Team, cm, முதல்வர், கொரோனா, மருத்துவ குழு

சென்னை: நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என மருத்துவ நிபுணர்கள் குழு விளக்கம் அளித்துள்ளது.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழுவுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்குப்பின் மருத்துவ குழுவினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா சோதனைகளை குறைக்கக்கூடாது என பரிந்துரைத்துள்ளோம். அதிக சோதனைகள் நடந்தால் தான், அதிக பாதிப்புள்ள இடங்களை கண்டறிய முடியும். கொரோனா அதிகம் பரவுவது குறித்து மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை 3 நாளில் கண்டறிந்து மருத்துவமனையில் அனுமதிப்பதால் தான், தமிழகத்தில் உயிரிழப்பு குறைவாக உள்ளது. கண்காணிப்பு, சோதனை, தனிமைப்படுத்துதலை தொடர்ந்து செய்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினால், கொரோனாவை கண்டு அச்சப்பட தேவையில்லை. இதற்கு மக்கள் ஒத்துழைப்பது அவசியம்.


latest tamil news



பணியிடங்களில் மாஸ்க் அணிவது, இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். வைரஸ் அறிகுறி தென்பட்டால், 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். தேவையில்லாமல் யாரும் வெளியே சுற்ற வேண்டாம். கொரோனா விரைவில் கட்டுக்குள் வரும்.

ஊரடங்கை படிப்படியாகத்தான் முடிவுக்கு கொண்டு வர முடியும். வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, தனிமைப்படுத்த வேண்டும். சுகர், கேன்சர், பிபி., நீண்ட நாட்களாக உள்ளவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டால் உயிரிழப்பும் வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
14-மே-202023:22:14 IST Report Abuse
Vena Suna எதற்கு கடைசியில் இந்த பயம் காண்பிக்கிறது? "சுகர், கேன்சர், பிபி., நீண்ட நாட்களாக உள்ளவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டால் உயிரிழப்பும் வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு அவர்கள் கூறினர்."'...இப்போது நிறைய பேருக்கு சுகர்,பிபி உள்ளது...தேவை இல்லாமல் எதற்கு பயத்தை இன்னும் அதிகமாக்குகிறீர்கள்? பொறுப்பான பதிவு அவசியம் ...
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
14-மே-202023:15:10 IST Report Abuse
Krishna India-Leaders, PM-CM-Ministers-Officials-IAS IPS etc Never Even Positive BUT ScapeGoat-Fool-Terrorise People-Misuse of Powers &Corona Terrorism (Abroad- Even PMs & Bureaucrats-Affected). Punish All Anti-People Corona Terrorists (Health-Police Officials & Testers Giving False Positives-more in MIG-HIG areas But Not in Slums etc). Disease-Under Control due to Lockdown & Hot Climate (Deaths are V.Small & V.Less Compared to Normalcy Except Inflated Corona Deaths by Vested Medical Terrorism) BUT Will RE-FLARE DUE TO Foolish IMPORT OF EXPATRIATES & MIGRANTS (QUARANTINE THEM IN ANDAMANS & LAKSHADEEP). Testing with Infected-Normal Kits-High False Positives (Even in RT-PCRs). DISEASE IMPORTED BY IDIOTIC RULERS &OFFICIALS by Bringing Overseas Citisens. DISEASE ALSO SPREADS BY AIR (All Isolation-Quarantine-HotSpot-GreenOrangeRed Zones, Fencing Etc are Corona Terrorism). ONLY SIMULTANEOUS ALL WORLD-STRICT LOCKDOWN (for 15days With Most essentials Door delivered by Govt Staff followed by Localised Lockdown for 15days is Sufficient Extendable if Really required Testing Done for Outgoing Persons & Symptomcs). HALTS DANGEROUS SPREAD (Otherwise Remains Long, Flaring Here & There)FOR IDEA STEALNG-IDIOTIC-FAT RULERS &OFFICIALS.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-மே-202020:38:16 IST Report Abuse
g.s,rajan The Medical council should pay the compensation to all the losses due to Corona Propaganda and d fear and Panic among the People which is unjustified. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X