சூட்கேஸில் தூங்கிய சிறுவனை இழுத்து செல்லும் தாய்; வைரல் வீடியோ

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: தனது சொந்த ஊருக்கு நடந்து செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களில், மகன் சூட்கேஸிலேயே தூங்க, அதை அவரது தாய் இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி மனதை கலங்க வைக்கிறது.நாடு முழுவதும் ஊரடங்கு அமலாகி உள்ளது. மே 17ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு 4வது முறையாக நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர்,
migrants, suitcase, dragged, mother,son, sleeping, migrant worker, Uttar Pradesh, Agra

புதுடில்லி: தனது சொந்த ஊருக்கு நடந்து செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களில், மகன் சூட்கேஸிலேயே தூங்க, அதை அவரது தாய் இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி மனதை கலங்க வைக்கிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலாகி உள்ளது. மே 17ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு 4வது முறையாக நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர், தங்கள் சொந்த ஊருக்கு நடந்தும், சைக்கிளிலும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.


latest tamil newsஇந்நிலையில், பஞ்சாபிலிருந்து உ.பி., மாநிலம் ஜான்சி நோக்கி 800 நடக்கும் ஒரு குழுவில், நடக்க முடயாத மகன் சூட்கேஸில் படுத்து தூங்க, அவரது தாய் சூட்கேசை இழுத்து செல்கிறார். அவரிடம் வீடியோ எடுத்தவர், மாநில அரசு ஏற்பாடு செய்த பஸ்சில் செல்லவில்லையா என கேள்வி கேட்க, பதிலளிக்காமல் தொடர்ந்து அவர் பயணம் மேற்கொள்கிறார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட அது வைரலானது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-மே-202022:44:51 IST Report Abuse
மதுரை விருமாண்டி அம்மையாரின் 48 லட்சம் கோடிகளில் இந்த சிறுவனுக்கு ஒரு பார்லே பிஸ்கட் துண்டாவது கிடைக்குமா?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-மே-202013:17:28 IST Report Abuse
தமிழவேல் உண்டு, அதற்கு முதலில் வங்கிக்கு சென்று கடன் பெற்றுக்கொள்ள வேண்டும். (முன்பே கடன் இல்லை என்றால்)...
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-மே-202022:38:09 IST Report Abuse
மதுரை விருமாண்டி // மாநில அரசு ஏற்பாடு செய்த பஸ்சில் செல்லவில்லையா என கேள்வி கேட்க, பதிலளிக்காமல் தொடர்ந்து அவர் பயணம் மேற்கொள்கிறார்.// "மாநில அரசு ஏற்பாடு செய்த பஸ்" ன்னு வாயிலே வடை சுட்டுட்டா போதுமா? ன்னு அவரு கேட்டது இங்கே போடப்படவில்லை. ஏற்பாடுகள் எல்லாம் கீழ்த்தட்டு மக்களுக்கு இல்லை என்பதை மௌனமாக செவிட்டில் அறைந்து அறைகூவியிருக்கிறார் இந்த தாய்..
Rate this:
Cancel
natesa -  ( Posted via: Dinamalar Android App )
14-மே-202022:30:05 IST Report Abuse
natesa dear pm sir, look at these people
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-மே-202013:16:12 IST Report Abuse
தமிழவேல் அவருதான், யாருமே தெருவில் இல்லைன்னு முன்னாலேயே சொல்லிட்டாரே......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X