ஆந்திராவில் புதிதாக 68 பேருக்கு கொரோனா

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020
Share
Advertisement

அமராவதி : ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்புகளில் மஹா., முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் மற்ற பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் கூடிக்கொண்டே செல்கிறது. ஆந்திராவில் கொரோனா தாக்கம் அதிகரித்து 2000 ஐ கடந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,205 ஆக உள்ளது. நோய் தொற்றால் ஒருவர் பலியானார். மொத்த பலிகளின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் எனவும் , கடந்த 24 மணிநேரத்தில் கர்னூலில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மொத்தமாக 1,192 பேர் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் நெல்லூரில் 15 பேர், சித்தூரில் 9 பேர், குண்டூரில் 5 பேர்மற்றும் கடப்பா, ஸ்ரீகாகுளம் மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் தலா 2 பேர் , மேற்கு கோதாவரியில் ஒருவர் என பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்புகளில் 21 பேர் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் உள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் 50 பேர் குணமடைந்தனர். 9,256 பேர் கொரோனா தொற்றுக்கு பரிசோதனை செய்யப்பட்டனர். மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 550 புதிய மருத்துவர்களை நியமனம் செய்யவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X