போட்டியின்றி எம்.எல்.சி.,யாக தேர்வானார் உத்தவ்

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

மும்பை:மஹாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே எம்.எல்.சி.,யாக தேர்வு செய்யப் பட்டதால் முதல்வராக தொடர்வதில் ஏற்பட்ட சிக்கலில் இருந்து தப்பினார்.



latest tamil news


மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு நவ., 28 ம் தேதி காங்., தேசியவாத காங்., உடன் கூட்டணி அமைத்து முதல்வராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே. அச்சமயத்தில் அவர் எம்.எல்.ஏ.,வா இல்லை.

மாநிலத்தில் கடந்த மார்ச் மாதத்துடன் சட்டமேலவையின் உறுப்பினர்களில் ஒன்பது பேரின் பதவிக்காலம் முடிவடைந்தது. உத்தவ் தாக்கரேவின் பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைவதால் அவர் எம்.எல்.சியாக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக தொடரலாம் என கட்சியினர் கருதினர்.


இதனிடையே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தல் கமிஷனும் மகாராஷ்டிரா மாநிலத்தின் மேலவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேதியை ஒத்திவைத்தது. இதனால் முதல்வர் பதவியில் நீடிப்பதில் தாக்கரேவுக்கு சிக்கல் ஏற்பட்டது.



latest tamil news




இந்நிலையில் மாநில கவர்னர் கேஷ்யாரி மாநிலத்தில் மேலவை தேர்தல் நடப்பதற்கான சூழ்நிலை உள்ளதாக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினார் தொடர்ந்து பிரதமர் மோடியும் தேர்தல் கமிஷனிடம் தேர்தலை விரைவில் நடத்தும்படி கேட்டுக்கொண்டார்.


உடனடியாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் காலியாக உள்ள ஒன்பது இடங்களுக்கு 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பின்னர் பா.ஜ., தேசியவாத காங்., கட்சியை சேர்ந்தோர் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இறுதியில் உத்தவ் உட்பட ஒன்பது பேர் களத்தில் நின்றனர். பின்னர் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ஒருவழியாக உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் நீடிப்பதற்கு இருந்த தடை நீங்கியது. இதனையடுத்து சிவசேனா கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
15-மே-202020:46:21 IST Report Abuse
Rajesh சமூகத்தில் இருக்கும், சாதனையாளர்களின் அறிவு களஞ்சியத்தை, மக்களுக்கு பயன் பட வேண்டுமென்று MLC என்ற ஒன்றை உருவாக்கினால், கசடுகள் அதை வேறுபோல் பயன்படுத்துகிறது........
Rate this:
Cancel
lalithavani - Varanasi,இந்தியா
15-மே-202011:46:11 IST Report Abuse
lalithavani இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாஜக அங்கு ஆட்சியை பிடித்து விடும் என்று எதிர் பார்த்த தொண்டர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.
Rate this:
Cancel
14-மே-202022:17:28 IST Report Abuse
Jayamurthy chandra mohan good news, congratulations 🎉
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X