மஹா.,வில் கொரோனா பலி ஆயிரத்தை கடந்தது| COVID-19: Maharashtra death toll reaches 1019 | Dinamalar

மஹா.,வில் கொரோனா பலி ஆயிரத்தை கடந்தது

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
மும்பை: மஹாராஷ்டிர மாநிலத்தில் இன்று 44 பேர் பலியானதை தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1019 ஆக அதிகரித்தது.சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க, மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 4வது முறையாக நீட்டிக்க உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.நாட்டில் அதிக கொரோனா பாதிப்பு
Maharashtra, coronavirus, covid-19, corona, corona outbreak, corona updates, corona news, corona cases, new corona cases, positive cases, corona death, death toll, Mumbai, BMC, corona spread

மும்பை: மஹாராஷ்டிர மாநிலத்தில் இன்று 44 பேர் பலியானதை தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1019 ஆக அதிகரித்தது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க, மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 4வது முறையாக நீட்டிக்க உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


latest tamil news



நாட்டில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. அங்கு இன்று புதிதாக 1,602 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27,524 ஆக அதிகரித்தது. இன்று மேலும் 44 பேர் பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி ஆயிரத்தை கடந்தது. இதன்மூலம் கொரோனாவுக்கு, நாட்டில் ஆயிரம் பலியை கடந்த முதல் மாநிலம் ஆனது மஹாராஷ்டிரா.

அங்கு இதுவரை 1019 பேர் பலியாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் 512 பேர் குணமாகி வீடு திரும்பியதையடுத்து, குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 6,059 ஆக அதிகரித்தது. இதனை மஹாராஷ்டிர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X