ஆப்கன் அரசுடன் இணைந்து கொரோனாவை விரட்ட உதவும் தாலிபான்..!

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

காபூல்: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட நன்மைகளில் முக்கியமானது பயங்கரவாதத் தடுப்பு. ஆப்கானிஸ்தானின் செயல்படும் பயங்கரவாத அமைப்பான தாலிபான் தற்போது கொரோனா காரணமாக சற்று அடக்கி வாசிக்கிறது.



latest tamil news



தனது பயங்கரவாத செயல்களுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்து ஆப்கானிஸ்தான் அரசுடன் இணைந்து செயல்படுகிறது. மேலும் கொரோனா பரவலைத் தடுக்க, கண்டிப்பாக ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளது. இதேபோல சர்வதேச பங்கரவாத அமைப்புகளான ஐஎஸ், ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்டவை தற்போது முடங்கி உள்ளன.

ஐநா செயலாளர் அண்டோனியோ குட்டர்ஸ் கொலம்பியா, சூடான், சிரியா, உக்ரைன், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். ஆப்கன் அதிபர் கனி, சிறைபட்டுள்ள 100 தாலிபான் கைதிகளை விடுதலை செய்துள்ளார். கொரோனா வைரஸ் சிறை கைதிகள் மூலமாக அதிகம் பரவுவதால் விரைவில் கைது செய்து சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 1500 தாலிபான் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.


latest tamil news



தாலிபான் ஆக்ரமிப்புப் பகுதிகளில் கொரோனா தாக்கப்பட்ட இடங்களில் தாலிபான் ரெட் கிராஸ் உள்ளிட்ட மனித நேய அமைப்புகளுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது உலக கவனம் பெற்றுள்ளது. தாலிபான் அமைப்பின் நல்ல பக்கங்களை உலகுக்குப் பறைசாற்றுவதாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
15-மே-202000:32:57 IST Report Abuse
வெகுளி என்னமோ போடா மாதவா ...கொரோனாவால் தாலிபானுக்கு நல்ல புத்தி வந்தால் மகிழ்ச்சியே....
Rate this:
Cancel
ஜெய் ஸ்ரீ ராம் இவ்வளவு நல்லவங்க ஏன் மக்களை கழுத்தறுத்து கொல்ல வேண்டும்.. அரசு சொன்ன தாலிபன் கேட்கிறது என்றால் தாலிபன் செயல்களுக்கு ஆப்கன் அரசு பொறுப்பேற்குமா?
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-மே-202023:07:57 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் கொரோனாவை கொல்ல தற்கொலை படையை அனுப்பலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X