ஆப்கன் அரசுடன் இணைந்து கொரோனாவை விரட்ட உதவும் தாலிபான்..! | Dinamalar

ஆப்கன் அரசுடன் இணைந்து கொரோனாவை விரட்ட உதவும் தாலிபான்..!

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (6)
Share

காபூல்: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட நன்மைகளில் முக்கியமானது பயங்கரவாதத் தடுப்பு. ஆப்கானிஸ்தானின் செயல்படும் பயங்கரவாத அமைப்பான தாலிபான் தற்போது கொரோனா காரணமாக சற்று அடக்கி வாசிக்கிறது.



latest tamil news



தனது பயங்கரவாத செயல்களுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்து ஆப்கானிஸ்தான் அரசுடன் இணைந்து செயல்படுகிறது. மேலும் கொரோனா பரவலைத் தடுக்க, கண்டிப்பாக ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளது. இதேபோல சர்வதேச பங்கரவாத அமைப்புகளான ஐஎஸ், ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்டவை தற்போது முடங்கி உள்ளன.

ஐநா செயலாளர் அண்டோனியோ குட்டர்ஸ் கொலம்பியா, சூடான், சிரியா, உக்ரைன், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். ஆப்கன் அதிபர் கனி, சிறைபட்டுள்ள 100 தாலிபான் கைதிகளை விடுதலை செய்துள்ளார். கொரோனா வைரஸ் சிறை கைதிகள் மூலமாக அதிகம் பரவுவதால் விரைவில் கைது செய்து சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 1500 தாலிபான் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.


latest tamil news



தாலிபான் ஆக்ரமிப்புப் பகுதிகளில் கொரோனா தாக்கப்பட்ட இடங்களில் தாலிபான் ரெட் கிராஸ் உள்ளிட்ட மனித நேய அமைப்புகளுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது உலக கவனம் பெற்றுள்ளது. தாலிபான் அமைப்பின் நல்ல பக்கங்களை உலகுக்குப் பறைசாற்றுவதாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X