சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லை, தென்காசி ரவுண்டப்: ஒரேநாளில் 17 பேருக்கு கொரோனா

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020
Share
Advertisement
coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, new corona cases, positive cases, corona death, tamil nadu, tn news, tn districts, TN fights corona, corona in TN, india

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மும்பையில் இருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் போலீஸ் சோதனை சாவடியில் வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடக்கிறது.
ராதாபுரம், பணகுடி அருகே பாம்பன்குளத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது மானுார் மாவடியை சேர்ந்த ஒருவருக்கும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.


latest tamil news




ராதாபுரம், பழவூரை சேர்ந்த இருவர், கூந்தன்குளத்தை சேர்ந்த 44 வயது ஆண், பார்பரம்மாள்புரத்தை சேர்ந்த 30 வயது ஆணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைகுறிச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதியானது. தென்காசி மாவட்டம் பொய்கையை சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு தொற்று உறுதியானது. பனவடலிசத்திரத்தை சேர்ந்த 43 வயது ஆணுக்கும் தொற்று உறுதியானது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X