தமிழ்நாடு

பாலியல் தொந்தரவால் இளம்பெண் தீக்குளிப்பு

Added : மே 14, 2020
Share
Advertisement


துாத்துக்குடி: பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததால் இளம்பெண் தீக்குளித்தார், 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

துாத்துக்குடி மாவட்டம், குளத்துார் அருகே புளியங்குளத்தை சேர்ந்த முனியசாமி மகள் நாகலட்சுமி 17. பத்தாம் வகுப்பு படித்துள்ளார்.சுயஉதவி குழு ஒன்றில் பணியாற்றினார். அவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மூவர், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
வீட்டோடு தீ வைத்துவிடுவோம் என அலைபேசியில் மிரட்டினர்.

மே.,9ல் அவர்களுக்கு பயந்து வீட்டில் தீக்குளித்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.உடல் முழுவதும் தீக்காயங்களுடன் வாக்குமூலம் அளிக்கும் ஒரு வீடியோ, சமூகவலைத்தளங்களில் பரவியது. ஐந்து நாட்களுக்கு பிறகு போலீசார் நேற்று அவரை மிரட்டிய சரவணகுமார்24, குகன் 23, வேல்சாமி 27 ஆகியோரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X