பொது செய்தி

இந்தியா

சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் மக்கள் ; மணிப்பூர் முதல்வர் வேண்டுகோள்

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
இம்பால் : கொரோனாவால் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் மணிப்பூர் மாநில மக்கள் தங்களது பயணம் குறித்த விபரங்களை அரசிடம் மறைக்க வேண்டாம் என அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்தார்.கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்

இம்பால் : கொரோனாவால் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் மணிப்பூர் மாநில மக்கள் தங்களது பயணம் குறித்த விபரங்களை அரசிடம் மறைக்க வேண்டாம் என அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்தார்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல துவங்கினர். இதையொட்டி வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப பல மாநில அரசுகளும் முயற்சி எடுத்து ரயில்களை இயக்குகின்றன. இந்நிலையில், ஊரடங்கில் சிக்கித் தவித்த 1,140 மணிப்பூர் மக்கள். சென்னையில் இருந்து ஒரு சிறப்பு ரயிலில் இன்று மாநிலத்திற்குத் திரும்பி வந்தனர். அவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.


latest tamil news



இதுகுறித்து அம்மாநில முதல்வர் கூறுகையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கொரோனா பாதிப்பு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பும் மணிப்பூர் மாநில மக்கள் , நோய் தொற்று தொடர்பாக தனது பயண விபரங்களை சுகாதார பணியாளர்களிடம் மறைக்க வேண்டாம். ஏனெனில் நோயின் தீவிரம் சற்று அதிகமாக இருப்பதால் பயண வரலாற்றை மறைப்பது ஆபத்தை விளைவிக்கும். இதையொட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்தும் மணிப்பூருக்கு வரும் மக்களுக்கு பாதுகாப்பை அளிக்க நமது அரசு போராடி வருகிறது. மாநிலத்தில் இருந்து சிக்கித் தவிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு, சென்னையைத் தவிர, பஞ்சாப், பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் இருந்து திரும்பும் மக்களையும் பாதுகாக்க நிர்வாகம் உதவும்.


latest tamil news



தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு செய்து வருகிறது. கொரோனா நோயிலிருந்து மனித உயிர்களை காப்பாற்றும் பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. கொரோனா தொடர்பாக அரசின் முயற்சிகளை குறை கூறாமல் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saku -  ( Posted via: Dinamalar Android App )
14-மே-202023:48:57 IST Report Abuse
saku கடந்த 50 நாட்களாக நடந்து கொண்டு இருக்கும் நிலையில் இப்பொழுது தான் இவர் கண்ணுக்கு தெரியுது போல். என்ன நல்ல ஆட்சி
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-மே-202021:34:33 IST Report Abuse
ஆரூர் ரங் பெரிய தொழில் வளர்ச்சியே சாத்தியமில்லாத ஏழை மாநிலம்.இளையோர் பலர் சென்னையில் ஹோட்டல், பியூட்டி பார்லர்களில் 3000 ,4000 சம்பளத்தில் ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் பணி. கேட்டால் மணிப்பூரில் மாதம் 500சம்பாதிப்பதே கடினம் என்கிறார்கள் . ஊருக்குப்போய் என்ன செய்வார்களோ பாவம் . சுற்றுப்புற சூழ்நிலையைக் காக்க பலகாலமாகவே அங்கு ஆலைகளை அனுமதிப்பதில்லை . அன்னிய மிஷ.நரிகளுக்கு கொண்டாட்டமாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X