பிரேசிலியா : பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து பலியானவர்களின் எண்ணிக்கை 13,240 ஆக அதிகரித்ததாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. அதிக பாதிப்புகளை கொண்ட ரஷ்யா அடுத்ததாகவும், பிரேசில் 7 வது இடத்திலும் உள்ளது. கடந்த சில நாட்களாக பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு கோர தாண்டவம் ஆடுகிறது. இதனால் பிரேசிலில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 12,240 ஆக உயர்ந்ததாக சுகாதாரதுறை தெரிவித்தது.

நாட்டில், கொரோனா தொற்றால் 1,90,137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 78,424 குணமடைந்து உள்ளனர். இந்நிலையில் நாட்டில் பதிவுசெய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளை விட தற்போதுள்ள நாட்களில் உண்மையான எண்ணிக்கை 15 மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பிரேசில் நாட்டில் கொரோனா நோய் அதிகரித்து வரும் நிலையில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சினோரா, கொரோனா பாதிப்புகளை சரியாகக் கையாளவில்லை. பிரேசில் மக்கள்தான் ஒன்றிணைந்து இனி அவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய அக்கறையற்ற அதிபருக்கு அவர்கள் உரிய பதில் கொடுக்க வேண்டும் என்றும் செய்தி வெளியானது.

மேலும் சமீபத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக அந்நாட்டு அதிபரிடம் கேட்டபோது, அவர் அளித்த பதில் விமர்சனத்தை உருவாக்கியது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE