பொது செய்தி

இந்தியா

கொரோனாவுக்கு ஆயுர் வேத மருத்துவ பரிசோதனை துவக்கம்: அமைச்சர்

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவின் ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணப்படுத்த பரிசோதனைகள் துவங்க உள்ளதாக ஆயுஷ் துறை இணை அமைச்சர் கூறி உள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் , மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், மருந்துகளை கண்டறிய முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில்

புதுடில்லி:கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவின் ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணப்படுத்த பரிசோதனைகள் துவங்க உள்ளதாக ஆயுஷ் துறை இணை அமைச்சர் கூறி உள்ளார்.latest tamil news


கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் , மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், மருந்துகளை கண்டறிய முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய ஆயுஷ் துறையின் இணை அமைச்சர் ஸ்ரீபாத்நாயக் கூறியதாவது:

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யுனானி, சித்தா, மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றின் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். இதற்கான சோதனைகள் ஒரு வாரத்திற்குள் துவங்கும். இதற்காக ஆயுஷ் அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) இணைந்து செயல்பட்டு வருகின்றன.


மேலும் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை நேர்மறையான விளைவைக் காண்பிக்கும் என்றும், 'இந்த தொற்றுநோயைக் கடப்பதற்கான வழி' வகுக்கும் என்பதில் தான் 'உறுதியாகவும் நம்பிக்கையுடனும்' இருப்பதாக அமைச்சர் நாயக் கூறினார்.


latest tamil newsஇதனிடையே சி.எஸ்.ஐ.ஆர் இயக்குநர் ஜெனரல் சேகர் மண்டே மற்றும் ஆயுர்வேதம் மற்றும் ஆயுஷ் செயலாளர் வைத்ய ராஜேஷ் கோடெச்சா ஆகியோர் விரைவில் நல்ல முடிவு வரும் என்றனர்.

மேலும் . நவீன மருத்துவ நடைமுறைகள் வருவதற்கு முன்பே ஆயுர்வேத நடைமுறைகள் இருந்தன. எனவே, சில ஆயுர்வேதக் கொள்கைகளை நாம் சரிபார்க்க வேண்டியது அவசியம். எனவே, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தற்போதைய நேரம் முற்றிலும் சரியானது.பாரம்பரிய சீன மருத்துவ முறைகளில் சீனர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களுடைய சில மருந்துகள் கொரோனா வைரசுக்கு எதிராக பயனுள்ளதாக இருந்ததாக அவர்கள் கூறி உள்ளனர். இவ்வாறு சேகர் மண்டே கூறினார்.

முன்னதாக பிரதமர் மோடி நாட்டுமக்களிடையே ஆற்றிய உரையின் போது உள்நாட்டு வணிகங்களுக்கு நமது ஆதரவை அளிக்க வேண்டும். அதற்காக குரல் கொடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இதனை கருத்தில் கொண்ட ஆயுஷ் துறை நமது பராம்பரிய மருத்துவ முறை மூலம் கொரோனாதொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க பரிசோதனை துவங்கப்படும் என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
15-மே-202008:07:45 IST Report Abuse
Tamilnesan இது தான் இந்தியாவில் உள்ள சிக்கல். எல்லா விஷயத்திலும் கால தாமதம். இப்பணியை ஒரு மாதம் முன்பு ஆரம்பித்திருந்தால் விலை மதிப்பற்ற பல மனித உயிர்கள் காப்பாற்றியிருக்க முடியும். இதுபோல, நெடிய தூக்கத்திலிருக்கும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனே நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். கேவலம். ஆயுர்வேதம் மற்றும் சித்த மருந்துகளின் தாயகமான இந்தியாவில் இந்த மருந்துகள் பரிந்துரைக்க இவ்வளவு கால தாமதம். இதற்கு காரணமானவர்கள் உடனே தூக்கி எறியப்பட வேண்டும்.
Rate this:
Cancel
14-மே-202022:18:58 IST Report Abuse
Jayamurthy chandra mohan why very quickly, take another one year to decide.
Rate this:
Cancel
shankarvelu - watford,யுனைடெட் கிங்டம்
14-மே-202022:17:00 IST Report Abuse
shankarvelu இதைத்தான் வைத்தியர் திருத்தணிகாசலம் மூணு மாசமா சொல்லுறாரு ஒரு பய கேட்கல
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
15-மே-202004:42:41 IST Report Abuse
Amal Anandanஇவங்க நல்லா நடிக்கிறாங்க, மருந்து இருக்குனு சொன்னவரை உள்ளத்தூக்கி வச்சுட்டு இப்போ இனிமேதான் பரிசோதனை பண்ணப்போறாங்களாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X