சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

பொறுத்திருந்து பார்ப்போம்!

Added : மே 14, 2020
Share
Advertisement
 பொறுத்திருந்து பார்ப்போம்!

பொறுத்திருந்து பார்ப்போம்!

'பரவாயில்லையே... அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நேரத்தில் தான் மக்களைப் பற்றி கவலை வரும்; இவருக்கு அதற்கு முன்பாகவே கவலை வந்து விட்டது. சந்தோஷமான விஷயம் தான்' என, ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை பாராட்டுகின்றனர், அந்த மாநில மக்கள். கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, 'எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும்' என்ற எண்ணத்தில், மக்களிடம் வாக்குறுதிகளை அள்ளி வீசினார் ஜெகன்மோகன் ரெட்டி. எதிர்பார்த்தது போலவே, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஆட்சியில் அமர்ந்தார். 'தேர்தல் வாக்குறுதி என்னாச்சு' என, மக்களிடமும், எதிர்க்கட்சியினரிடமும் முணு முணுப்பு இருந்து வந்தது. மாநிலத்தின் நிதி நெருக்கடி மோசமாக இருந்ததால், என்ன செய்வது என தெரியாமல் கைகளை பிசைந்தார் ஜெகன். ஆனால், முதல்வர் பதவியில் அமர்ந்து ஒரு ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், சமீபகாலமாக அவரது நடவடிக்கைககள் வேகம் எடுத்துள்ளன. 'எட்டு லட்சத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு வட்டியில்லா கடன், 14 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கட்டணம்' என, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். எதிர்க்கட்சியினரோ, 'கொரோனா பிரச்னையில், உலகமே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இவரால் மட்டும் எப்படி இந்த திட்டங்களை செயல்படுத்த முடியும். பொறுத்திருந்து தான் பார்ப்போமே...' என, காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X