ஆந்திராவில் டிராக்டர் மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் 9 பேர் பலி

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

நெல்லூர்: ஆந்திர மாநிலத்தில் டிராக்டர் ஒன்று மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் 9 பேர் பலியானார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



latest tamil news



ஆந்திர மாநிலம் நெல்லூரை அடுத்த பிரகாசம் மாவட்டத்தில் 15 விவசாய தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இவர்கள் அருகில் உள்ள கிராமத்தில் விவசாய பணிகளை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்த டிராக்டர் செல்லும் வழியில் போலீசார் தடுப்புகளை அமைத்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் நிறுத்த முயன்ற போது டிராக்டர் ஓட்டுநர் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து டிராக்டரை போலீசார் விரட்டியுள்ளனர். அப்போது டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தின் மீது மோதியுள்ளது, இதனால் உயர் மின் அழுத்தம் கொண்ட கம்பி டிராக்டர் மீது விழுந்ததில் டிராக்டரில் பயணம் செய்த 9 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களில் 7 பேர் பெண்கள் என சொல்லப்படுகிறது.


latest tamil news



விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்ப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு ,இந்தியா
15-மே-202005:19:27 IST Report Abuse
NicoleThomson அந்த ட்ரைவர் மீது கொலைக்குற்றம் சாட்டி தண்டனை வழங்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X