ஊரடங்கை மாதக் கணக்கில் நீட்ட முடியாது: கட்கரி திட்டவட்டம்

Updated : மே 16, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
ஊரடங்கு, கொரோனா, வைரஸ், கொரோனாவைரஸ்,

புதுடில்லி: ''கொரோனா வைரஸ் இயற்கையாக தோன்றவில்லை; அது, ஆய்வகத்தில் இருந்து பரவிய வைரஸ். ''இதற்காக, ஊரடங்கை மாதக் கணக்கில் நீட்டித்தபடி இருக்க முடியாது. கொரோனாவுடன் வாழப் பழக வேண்டும்,'' என, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


முயற்சி


இந்நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று கூறியதாவது:கொரோனா வைரசுடன் வாழ்வதற்கு, நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இது, இயற்கையாக உருவான வைரஸ் அல்ல; செயற்கை வைரஸ். இது, ஆய்வகத்தில் இருந்து பரவிய வைரசாகும். இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகளில், பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கான தடுப்பு மருந்து, விரைவில் கிடைத்து விடும் என, நான் நம்புகிறேன். அப்படி கிடைத்துவிட்டால், எந்த பிரச்னையும் இருக்காது.வைரசால் பாதிக்கப்பட்டோரை கண்டுபிடிக்கும் முறையும் சிக்கலாகவே உள்ளது. அதற்கு, சிறந்த முறை தேவைப்படுகிறது. இந்த வைரசை வீழ்த்த, ஒட்டுமொத்த உலகத்தைப் போல், இந்தியாவும் தயாராக உள்ளது.


பொருளாதார யுத்தம்



கொரோனா வைரசை எதிர்த்து, நாம் போராட வேண்டியது அவசியம்; அதேசமயம், பொருளாதார யுத்தத்திலும் முன்னேறிச் செல்ல வேண்டியது முக்கியமாகும். இந்தியா மிகவும் ஏழ்மையான நாடு. ஆகையால், ஊரடங்கை மாதக்கணக்கில் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jakku -  ( Posted via: Dinamalar Android App )
15-மே-202017:32:12 IST Report Abuse
jakku இரண்டு மதமா உரடங்கில் தானே இருக்கு
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
15-மே-202016:07:57 IST Report Abuse
babu ஆமாமா வருமானம் வேணுமுல்ல எல்லாருக்கும். ஓவர்லோட் அடிக்கிற பேருந்துகளிலயும் லாபமில்ல, ரோட்டோட மொத்த செலவையும் தாண்டி வசூலிக்கிற டோல்கேட்டிலயும் லாபமில்ல. நஷ்டம் கஜானா கணக்கில், லாபம் மந்திரிக் கணக்கில். இனிமே என்ன பஸ்ஸுல சிட்டிங் டிக்கெட்ட ட்ரிபுளாவும், ஸ்டேண்டிங் டிக்கெட்ட டபுளாயும் கூட்ட போறீங்களா?
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
15-மே-202014:53:11 IST Report Abuse
Nallavan Nallavan உண்மையில் இவர் practicala விஷயங்களை அலச கூடியவர் என்னை கேட்டால் பிரதமர் பதிவ்க்கு ஏற்றவர் , ஏன் எனில் ராசி இல்ல மோடி நிம்மி இவர்களை நீக்கிவிட்டு இவரை பிரதமர் ஆகி நாட்டை காப்பாத்தலாம் , அறிவாளிகள் சொன்னால் கேட்பார் , EGO கிடையாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X