பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக பொருளாதாரத்தை சீரமைப்பது எப்படி? ரங்கராஜன் குழு ஆலோசனை

Updated : மே 16, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
தமிழக பொருளாதாரத்தை சீரமைப்பது எப்படி? ரங்கராஜன் குழு ஆலோசனை

சென்னை : தமிழகத்தில், கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள, பொருளாதார பாதிப்பை சீரமைக்க, அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க, 24 பேர் இடம் பெற்ற உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவின் தலைவராக, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழு, தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்தக் குழுவின் முதல் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. அதன் பின், குழுவின் தலைவர் ரங்கராஜன் கூறியதாவது:


'வீடியோ கான்பரன்ஸ்'


பொருளாதாரத்தை மேம்படுத்த, உடனே என்ன செய்ய வேண்டும்; இரண்டு ஆண்டுகளுக்குள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பங்கேற்றனர். சிலர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.முதல் கூட்டம் என்பதால், எந்த முடிவும் எடுக்கவில்லை; இடைக்கால அறிக்கை வழங்குவது குறித்தும், முடிவு செய்யப்படவில்லை; வேண்டுமானால் கொடுக்கலாம். தமிழகத்தில், எவ்வளவு துாரம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது; உடனே செய்ய வேண்டியது; இரண்டு ஆண்டுகளுக்குள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

பொருளாதார சீர்திருத்தம் ஏற்படுத்த, வெவ்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அவற்றை சீரமைப்பது குறித்து, தனித்தனியே ஆய்வு செய்ய, பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


முழு இழப்பை கூற முடியும்.


இக்குழுவில், துறை நிபுணர்கள், பொருளாதார வல்லுனர்கள், துறை செயலர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள், துறை தொடர்பானவர்களை சந்தித்து பேசி, அறிக்கை அளிப்பர். அந்த அறிக்கைகளை கலந்தாலோசித்து, அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும்.பொருளாதார இழப்பு, ஊரடங்கு முடிவுக்கு வருவதை பொறுத்து அமையும். ஏப்ரல் முழுதும் ஊரடங்கு இருந்ததால், ஒரு மாத இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவடைவதை பொறுத்தே, முழு இழப்பை கூற முடியும்.
சில நேரங்களில், பொருளாதாரம் கீழே போகும்; மீண்டும் திரும்ப வந்து விடும். அப்படி இருந்தால் பாதிப்பு குறைவாக இருக்கும். தினமும் ஆலோசனை நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ranganathan.V - chennai,இந்தியா
17-மே-202010:17:14 IST Report Abuse
ranganathan.V Good effort, atleast making positive move,all ways people will comment,if small assignment given to them then the real picture will come to lime light
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
15-மே-202021:17:43 IST Report Abuse
konanki தமிழ் நாட்டிற்கு கவலையே இல்லை.இங்கேயே எவ்வளவு பொருளாதார மேதைகள். அனைவரும் நோபல் பரிசு பெற தகுதியுள்ளவர்கள். சூப்பர்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
15-மே-202019:55:32 IST Report Abuse
r.sundaram தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளால், அரசியல்வாதிகளால் நடத்தப்படும் லஞ்சம் ஊழல் இல்லாமல் ஆனால், தனியாகவே எல்லாம் சரியாகி விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X