பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு எப்போது ?: ஆலோசனை குழு அமைத்தது அரசு

Updated : மே 16, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : புதிய கல்வி ஆண்டில், பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்க, கல்வி அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னையால், தேர்வுகள் தாமதமாக நடத்தப்படுகின்றன. புதிய கல்வி ஆண்டில், பள்ளிகள் துவங்குவதும் தள்ளிப் போகலாம். எனவே, பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கவும், பாடங்களை தொழில்நுட்ப ரீதியாக நடத்தும் முறைகளை கண்டறியவும், ஆலோசனை குழு
பள்ளிகள் திறப்பு , ஆலோசனை குழு , அரசு

சென்னை : புதிய கல்வி ஆண்டில், பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்க, கல்வி அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னையால், தேர்வுகள் தாமதமாக நடத்தப்படுகின்றன. புதிய கல்வி ஆண்டில், பள்ளிகள் துவங்குவதும் தள்ளிப் போகலாம்.

எனவே, பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கவும், பாடங்களை தொழில்நுட்ப ரீதியாக நடத்தும் முறைகளை கண்டறியவும், ஆலோசனை குழு அமைத்து, பள்ளி கல்வி முதன்மை செயலர், தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.


உத்தரவில், அவர் கூறியிருப்பதாவது:
கொரோனா பிரச்னையால், கற்றல், கற்பித்தல் பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, அவற்றுக்கு தீர்வு காணும் முறைகளை கண்டறிய வேண்டும்.
புதிய கல்வி ஆண்டை, துவங்குவது தாமதமாகும் என்பதால், எப்போது பள்ளிகளை திறப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். இடைபட்ட காலத்தை, மாணவர்களுக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும்.ஆசிரியர், மாணவர் இடைவெளியை குறைத்து, தொழில்நுட்ப வழியில் பாடங்களை நடத்தும் முறைகளை கண்டறிய வேண்டும்.

இதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்காக ஆலோசனை குழு அமைக்கப்பட்டு உள்ளது.பள்ளி கல்வி இயக்குனர், தொடக்க கல்வி, மெட்ரிக் பள்ளி, தேர்வு துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர்கள், அனைவருக்கும் கல்வி திட்ட துறை, கல்வி தொலைக்காட்சி, பெற்றோர் ஆசிரியர் கழகம், யுனிசெப், தமிழக இ - சேவை, சென்னை ஐ.ஐ.டி.,யின் தொழில்நுட்ப பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள், இந்த குழுவில் இடம் பெறுவர்.இந்த குழுவினர், ஆய்வுகளை விரைந்து முடித்து, முடிவுகளை அரசுக்கு அறிக்கையாக,15 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mrsethuraman - Bangalore,இந்தியா
15-மே-202011:53:23 IST Report Abuse
mrsethuraman  கரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் திறந்த வெளி பள்ளி மைதானத்தில் மாணவர்களிடையே தகுந்த இடைவெளி விட்டு வகுப்புகள் நடத்துவது பற்றி யோசிக்கலாம் .
Rate this:
Cancel
Karthikeyan K Y - Chennai,இந்தியா
15-மே-202008:02:04 IST Report Abuse
Karthikeyan K Y மிக சரியான நேரத்தில், சரியான முயற்சி. சிறந்த முதல் முயற்சி, இதில் அரசியல் செய்யாமல் ஆற்றலை நோக்கமாக வைத்து கல்வி மேம்பாட்டை முதன்மையாக வைத்து செயல் பட வேண்டும். தினமலர் போன்ற பத்திரிக்கைகள் காலம் காலமாக கல்வித்துறைக்கு நற்பணி செய்து கொண்டு வருகிறார்கள். அவர்களையும் பத்திரிக்கை சார்பாக, சேர்த்து மாவட்ட வாரியாக எடுத்து செல்ல வேண்டும்.
Rate this:
Cancel
15-மே-202007:42:10 IST Report Abuse
ஆப்பு எல்லாம் சீக்கிரமே தொறந்திருவாங்க. கொரோனாவோட வாழப் பழகிக்கணும்னு இப்பவே பில்டப் குடுக்க ஆரம்பிச்சாச்சு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X