ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 933 பேருக்கு கொரோனா

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020
Share
Advertisement

பெர்லின் : கொரோனா பாதிப்புகள் மீண்டும் துவங்கியதையொட்டி, ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 933 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து சில நாட்களுக்கு முன் ஊரடங்கு தளர்த்தப் பட்டது. தற்போது மீண்டும் கொரோனா பரவ துவங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிககை 1,72, 239 ஆக அதிகரித்தது. அமெரிக்காவை தொடர்ந்து, ரஷ்யா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. ஜெர்மனியில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 933 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


latest tamil news



ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 89 பேர் பலியாகினர். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,723 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1.50 லட்சம் பேர் நோய் தொற்றிலிருந்து மீண்டனர். உலகளவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 3 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 2,97,000 க்கும் அதிகமானவர்கள் பலியானதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X