தமிழ்நாடு

கல்லா 'புல்லா' காசு! வந்தது எப்படி என கேட்டு மதுக்கடைகளுக்கு நோட்டீஸ்!

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
 கல்லா 'புல்லா' காசு! வந்தது எப்படி என கேட்டு மதுக்கடைகளுக்கு நோட்டீஸ்!

அன்னுார்:கோவை வடக்கு மாவட்டத்தில், டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட இரண்டாம் நாள், பல கடைகளில், முறைகேடாக மது விற்றவர்கள் மீது, விசாரணை துவக்கப்பட்டுள்ளது. அந்தந்த கடை சூப்பர்வைசர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
தமிழகத்தில், 43 நாட்களுக்கு பிறகு, கடந்த மே 7ம் தேதி சென்னை மாநகர் நீங்கலாக மற்ற இடங்களில், டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.கோவை வடக்கு மாவட்டத்தில், 7ம் தேதி ஒரு கி.மீ., முதல், இரண்டு கி.மீ., துாரம் வரை, குடிமகன்கள் வரிசையில் நின்றனர். 4:00 முதல் 5:00 மணி நேரம் காத்திருந்து, மது வாங்கி சென்றனர்.
முதல் நாளே மொத்தமாக வாங்கிச் சென்றதால், 8ம் தேதி இந்த கூட்டம் கால்வாசி ஆக குறைந்தது. மாவட்டத்தில் உள்ள, பெரும்பாலான கடைகளிலும், வெறும் ஐம்பது பேர் மட்டுமே வரிசையில் நின்றனர்.இதில், கோவில்பாளையம் டாஸ்மாக் மதுக்கடையில், 7ம் தேதி, 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு, விற்பனையானது. ஆனால் 8ம் தேதி, 29 லட்சம் ரூபாய்க்கு மது விற்றுள்ளது.
எப்படி கூடுதல் விற்பனை?
இதே போல் பீளமேடு, டி.வி.எஸ். நகர், பிளீச்சி, காரமடை, வேலந்தாவளம் உட்பட சில கடைகளில், 7ம் தேதி விற்றதை விட, இரண்டு முதல், மூன்று மடங்கு மது, 8ம் தேதி விற்றதாக, டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது.8ம் தேதி கடைகளில், குடிமகன்கள் கூட்டமே இல்லாதபோது, விற்பனை எப்படி இரண்டு முதல், மூன்று மடங்கு வரை, அதிகரித்தது என, விசாரணை நடக்கிறது.
சில கடைகளின் ஊழியர்கள், கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து, கூடுதல் விலைக்கு விற்க, மது பாட்டில்களை எடுத்து, பதுக்கியது தெரியவந்துள்ளது.இது குறித்து புகார் எழுந்து, நான்கு நாட்களாகி விட்டது. டாஸ்மாக் கோவை மண்டல முதுநிலை மேலாளர் பரமேஸ்வரி மற்றும் மாவட்ட அதிகாரி ஆகியோர், 'விசாரணை நடத்த உள்ளோம்' என்னும் ஒரே பதிலையே, இரண்டு நாட்களாக தெரிவித்து வருகின்றனர்.
இப்படி அதிகாரிகள் இழுத்தடிப்பதால், முறைகேட்டுக்கு அதிகாரிகளும் உடந்தையோ என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.முறைகேடாக மது விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பதுக்கி வைத்துள்ள பல லட்சம் ரூபாய் மது பாட்டில்களை, ரெய்டு நடத்தி கைப்பற்ற, மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
'விளக்கம் கேட்கப்படும்!'
இது குறித்து, கோவை வடக்கு மாவட்ட டாஸ்மாக் அலுவலர் தாஜூதீன் கூறுகையில், "இரண்டாவது நாள், கூடுதலாக மது விற்ற கடைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. விளக்கத்தின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
18-மே-202022:19:25 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி மது குடிப்பதே தண்டம் . இதில் நேர்மையான வியாபாரம் நடக்குமா? எப்படியோ தொலையட்டும்.
Rate this:
Cancel
PR Makudeswaran - Madras,இந்தியா
18-மே-202017:31:06 IST Report Abuse
PR Makudeswaran விளக்கம் கேட்கப்படும் நோட்டீஸ் அனுப்பப்படும் நடவடிக்கை எடுக்கப்படும். எல்லாமே பேப்பரில் வரும் ஆனால் நிஜத்தில் ஒன்றுமே வராது.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-மே-202011:59:04 IST Report Abuse
Lion Drsekar யாரையும் எதுவுமே செய்ய முடியாது கேள்வி கேட்ட அதிகாரிக்கு வேலை போகும் பாவம், தவறு செய்பவர்கள் அனைத்து நிலைகளிலும் மிக நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் ஆகவே யாராலும், யாரையும் எதுவுமே செய்ய முடியாது, அந்த அளவுக்கு ஜனநாயகத்தின் சக்தி மேலோங்கி விட்டது, இதே கேள்வி கேட்டவர் அவர்கள் கல்லா பெட்டியை கணக்கு பார்த்து அதிகமாக பணம் எப்படி வந்தது என்று இதுநாள் வரை கேட்டதுண்டா? அனைவருக்கும் தெரியும் நீதிமன்றத்துக்கும் தெரியும், தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்கலாம், நம் வாசகர்களில் ஒருவரான சம்பத் குமார் அவர்கள் கூறியது போல் நிதி தான் நதியாக ஓடுகிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X