கேரள அரசின் அச்சம் உண்மையானது - நாடு திரும்பியவர்களால் வேகமெடுத்த கொரோனா!

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement

திருவனந்தபுரம் : கேரளாவில் மார்ச் இறுதிக்கு பிறகு ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, இன்று (மே 14) ஒரே நாளில் மட்டும் 26 ஆக அதிகரித்துள்ளது.



latest tamil news



கேரளாவில் இதுவரை 560 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, அவர்களில் 64 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்தொற்றையும், உயிரிழப்பையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கேரளாவில் இன்று ஒரே நாளில் 26 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 7 பேர் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பியவர்கள். இதுவரை அவ்வாறு கேரளா திரும்பிய 22 பேருக்கு கொரோனா உள்ளது. வரும் நாட்களில் அதிக விமானங்கள் எதிர்பார்க்கப்படுவதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்கின்றனர்.

தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸை தவிர பிற அரபு நாடுகளிலிருந்து இந்தியா அனுப்பப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யவில்லை. சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திருப்பி அழைத்து வரும் போது, கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பின்பே அவர்களை அழைத்து வர வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் பேராபத்து ஏற்பட்டு விடும் என குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news



இது குறித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன் “இது மாநிலத்திற்கு ஒரு முக்கியமான கட்டம். கடந்த சில நாட்களில், இங்கு வைரஸ் தொற்று ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருந்தது, சில நாட்கள் அதுவும் இல்லை. திடீரென வேகமெடுத்திருப்பது மறைந்துள்ள அச்சத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே கடுமையான நெறிமுறையை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு பாஸ் வழங்குமாறு நாங்கள் வற்புறுத்தியபோது பலர் எங்களை கேள்வி எழுப்பினர். அரசியல் செய்யும் நேரம் இல்லை. இதிலிருந்து மீண்டு வருவோம் என உறுதியாக கூறுகிறேன்.” என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JIVAN - Cuddalore District,இந்தியா
19-மே-202010:07:42 IST Report Abuse
JIVAN முட்டாப்பயலுங்காக போலவே கருத்துக்கள்
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
17-மே-202023:24:33 IST Report Abuse
unmaitamil இரண்டு மாதமாக, அரபுநாடுகளில் பத்து லட்சம் கேரளா மக்கள் அவதிப்படுகிறார்கள். இங்கு எல்லா ஏற்பாடும் ரெடி. மத்திய அரசு அவர்களை நாட்டிற்கு கொண்டுவந்தால் போதும். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று அரசியல் நாடகம் ஆடினார் பினராய். இவ்வளவு ஆட்களை மத்திய அரசு கொண்டுவருவது இயலாத காரியம் என்று எதிர்பார்த்து , வீர வசனம் பேசினார். ஆனால் மத்திய அரசு கப்பலிலும், விமானத்திலும் நான்கு நாட்களில் ஐயாயிரம் ஆட்களை கொண்டுவந்தவுடன், இப்போது கதறுகிறார். வாயில் வடை சுட்டது வெளியானது. கேரளாவில் ஒரு நாளைக்கு நூறு சோதனைகள் கூட செய்வதில்லை . அதனால் தொற்று இல்லை என்று ஏமாத்திவிட்டனர். இன்னும் இரண்டு வாரங்களில் உண்மை வெளிவரும். அப்போது சீனாவைப்போல் கம்மிஸ் சேட்டனின் சாயம் வெளுக்கும்.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
17-மே-202017:55:13 IST Report Abuse
madhavan rajan கேரளா மாநிலத்துக்காரர்கள் உலகத்தையே நிரப்புகிறார்கள். அவர்களெல்லாம் திரும்பி வந்து கேரளாவை கொரோனாவால் நிரப்புகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X