சீனாவுடன் உறவு துண்டிப்பு: டிரம்ப் எச்சரிக்கை

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனா வைரசை சரியாக கையாளாத சீனா மீது அதிருப்தியில் உள்ளதாகவும், அந்நாட்டுடனான உறவை துண்டிக்க முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு டிரம்ப் அளித்த பேட்டி: சீன அதிபர் ஷி ஜிங்பிங் உடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. ஆனால், தற்போது அவருடன் பேச விரும்பவில்லை. சீனா மீது அதிருப்தியில் உள்ளேன். தற்போது அதனை
Donald Trump,Trump, us china, 
டிரம்ப்,டோனால்ட் டிரம்ப், china, Xijingping, சீனா,

வாஷிங்டன்: கொரோனா வைரசை சரியாக கையாளாத சீனா மீது அதிருப்தியில் உள்ளதாகவும், அந்நாட்டுடனான உறவை துண்டிக்க முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு டிரம்ப் அளித்த பேட்டி: சீன அதிபர் ஷி ஜிங்பிங் உடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. ஆனால், தற்போது அவருடன் பேச விரும்பவில்லை. சீனா மீது அதிருப்தியில் உள்ளேன். தற்போது அதனை கூறுகிறேன் என்றார்.


latest tamil news



சீனாவுக்கு எப்படி அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்ற கேள்விக்கு டிரம்ப் அளித்த பதில்: சீனாவுக்கு பதிலடியாக எங்களால் பல விஷயங்கள் செய்ய முடியும். சீனாவுடனான ஒட்டுமொத்த உறவையும் துண்டிக்க முடியும். அவ்வாறு செய்வதன் மூலம், அமெரிக்காவுக்கு 500 பில்லியன் டாலர் மிச்சமாகும். கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் வந்தது. அதனை அவர்களால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நிலா - மதுரை,இந்தியா
15-மே-202017:32:10 IST Report Abuse
நிலா முதலில் அதை செய்யுங்க அதிபர் டிரம்ப் வாய்சவடால் வேண்டாம் அமெரிக்காவில் 25% சீனர்கள் வாழுகிறார்கள் சீனாப் பொருட்கள் அங்கு அமோக விற்பனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உபயோகின்றனர் சீனாவின் தயாரிப்புகள் இல்லாத வீடுகளே கிடையாது எப்படி உறவை துண்டிப்பீர்கள்?
Rate this:
Cancel
Chola - bangalore,இந்தியா
15-மே-202017:09:26 IST Report Abuse
Chola பேசிட்டே இருந்த எப்படி, சட்டுபுட்டுனு ரெண்டு தடை உத்தரவை போடுங்க...
Rate this:
Cancel
Madhav - Chennai,இந்தியா
15-மே-202015:36:24 IST Report Abuse
Madhav சீன பொருட்கள் உலகம் பூராவும் ஏற்றுமதி ஆகிறது. சீன நாணயத்தின் மதிப்பை சீனா செயற்கையாக குறைத்து உலகம் பூராவும் தன் பொருட்களின் விலையை குறைத்து விக்கிறது. மேலும் சீனாவில் தொழிலாளர்களை அடிமைகளாக வைத்து வேலை வாங்கும் பழக்கமும் உள்ளது. இதனால் சீன பொருளாதாரம் அதனிடம் பொருட்கள் வாங்கும் நாடுகளை சார்ந்து இருக்கிறது. ஆனால் இது வரும் நாட்களில் மாற ஆரம்பிக்கும். ஆனால் இந்த தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வர வாய்ப்பு மிக குறைவு. ஏனெனில் இந்தியாவின் திறன் மிக்க தொழிலாளர்கள், வெளிநாடுகளில் சென்று அதிக சம்பளம் பெற வாய்ப்பு உள்ள நிலையில் இதில் சேர மாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X