அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: எச்.ராஜா

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (154)
Share
Advertisement
DMK, Stalin,  Raja, BJP, stalin news, dmk chief, tamil nadu news,
 திமுக, தலைவர், ஸ்டாலின், மன்னிப்பு, பிரதமர், பாஜ, பாஜக, எச்ராஜா, ஹெச்_ராஜா

சிவகங்கை: பிரதமருக்கு எதிராக சிலரை ஏவி விட்டு கொச்சையாக பேச வைக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜ., தேசிய செயலர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொருளாதாரத்தில் அ, ஆ தெரியாதவர் ப.சிதம்பரம். அவர் சொன்ன கருத்துக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. 14 நாடுகளில் சொத்து வைத்திருக்கும் அவருக்கு இந்தியாவை பற்றி எதுவும் தெரியாது. 24 ஆண்டுகளாக மதுவிலக்கு மாநிலமாக இருந்த தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியது திமுக தான். 2016 தேர்தலில் அதிமுக படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவதாக தெரிவித்திருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆசையை தற்போதைய அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


latest tamil newsநமது மருத்துவ வல்லுனர்களின் முயற்சியால் 60 நாட்களுக்குள் கொரானாவிற்கான மருந்து கண்டுபிடிக்கப்படும். கொரானவிற்கு எதிராக மட்டும் நாம் கவனம் செலுத்த வேண்டும். சிறு, சிறு பிரச்சனைகளை கண்டு கொள்ள கூடாது. ஒரே நாடு, ஒரே ரேஷன் என்பதை எதிர்த்த திமுக போன்ற கட்சிகள் மக்களின் நலனில் அக்கறை இல்லாதவர்கள். மக்கள் எப்போதும் துன்பத்திலேயே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். ஸ்டாலின் பிரதமருக்கு எதிராக மோசமான செயல்பாட்டை கையில் எடுத்து வருகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். சிலரை ஏவி விட்டு கொச்சையாக பிரதமரை தாக்கி பேச வைக்கும் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (154)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
21-மே-202016:39:29 IST Report Abuse
Thiagarajan Kodandaraman MR RAJA PLEASE Don't Expect Decency this PARTY Earlier EX Leader also doing Same like. Last Election Tamilians Made BIG Mistake SEND 38 MP's to NEW Delhi Rignt now they FEEL
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
19-மே-202005:34:07 IST Report Abuse
meenakshisundaram ராஜா அவர்களே கொஞ்சம் யோசியுங்க -ஸ்டாலின் பேசுவதெல்லாம் பிழைகளே, அவர் மன்னிப்பு கேட்கணும்னா ,தினமுமே கேட்க்கும்படி ஆகிடும்
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-மே-202000:33:32 IST Report Abuse
Ramesh R ஹரஹர ராஜாவுக்கு என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X