சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

கொரோனாவும், ஹோமியோபதியும்!

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
'கொரோனா' என்ற வைரஸ் தொற்று, உலகம் முழுதும் தாக்கி, ஏராளமானோர் உயிரை பறித்து வருகிறது. எனினும், அதற்கு தடுப்பு மருந்தோ, சரியான சிகிச்சைக்கான மருந்தோ, ஆங்கில மருத்துவத்தில் இல்லை. அதற்கு காரணம், இது, புது வகையான வைரஸ். ஐந்து மாதங்களுக்கு முன் தான் கண்டறியப்பட்டது என, கூறப்படுகிறது. அதனால், அந்த நோயை கட்டுப்படுத்த தேவையான தீர்வு மற்றும் தடுப்பு மருந்துகள் பற்றி, உலக
coronavirus, corona, covid 19, homeopathy, coronavirus treatment,கொரோனா, ஹோமியோபதி,

'கொரோனா' என்ற வைரஸ் தொற்று, உலகம் முழுதும் தாக்கி, ஏராளமானோர் உயிரை பறித்து வருகிறது. எனினும், அதற்கு தடுப்பு மருந்தோ, சரியான சிகிச்சைக்கான மருந்தோ, ஆங்கில மருத்துவத்தில் இல்லை. அதற்கு காரணம், இது, புது வகையான வைரஸ். ஐந்து மாதங்களுக்கு முன் தான் கண்டறியப்பட்டது என, கூறப்படுகிறது. அதனால், அந்த நோயை கட்டுப்படுத்த தேவையான தீர்வு மற்றும் தடுப்பு மருந்துகள் பற்றி, உலக நாடுகளுக்கு தெளிவான பார்வை இல்லை. இதனால் தான், 200க்கும் மேற்பட்ட நாடுகளில், அந்த நோய் தொற்று பரவி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ளது.


'ஆர்சனிக் ஆல்பம் 30'

தமிழர்களாகிய நம் அனைவருக்கும், சித்த மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ள, கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் பற்றி, நல்ல விழிப்புணர்வு உள்ளது. அதுவும், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தான், நம் பாரம்பரிய சித்தா மருந்தான, கபசுர குடிநீரை, கொரோனா தொற்றாளர்களுக்கு, தமிழக சுகாதாரத்துறை வழங்கியது.கொரோனாவை, கபசுர குடிநீர் ஒடுக்கும் என, பல வல்லுனர்கள் வாதிட்ட பிறகு, தமிழக சுகாதாரத்துறை இறங்கி வந்து, நோயாளிகளுக்கு அதை வழங்கி வருகிறது. அது போலவே, ஹோமியோபதியிலும், கொரோனாவுக்கு தீர்வு உள்ளது என, ஹோமியோபதி மருத்துவர்கள் பலரும் கூறி வருகின்றனர். 'ஆயுஷ்' எனப்படும், மத்திய சுகாதாரத் துறையின், அனைத்து மருத்துவ முறைகள் ஒருங்கிணைப்பு குழுவும் பரிந்துரைத்துள்ளது.எனினும், தமிழகம் மற்றும் நம் நாட்டில், ஹோமியோபதி மருந்துகள், கொரோனா தொற்றாளர்களுக்கும், முன்னெச்சரிக்கையாகவும் வழங்கப்படுவதில்லை.ஐ.சி.எச்., எனப்படும், உலக ஹோமியோபதி மருத்துவ கவுன்சில், கொரோனாவிற்கு மாற்று மருந்தாக பரிந்துரைத்துள்ள, 'ஆர்சனிக் ஆல்பம் 30' என்ற மருந்து பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை.


மலிவானவை

இந்த மருந்தை, நான்கு மாத்திரைகள் வீதம், மூன்று வேளையும், மூன்று நாட்களுக்கு உட்கொள்ளுமாறு, ஹோமியோபதி கவுன்சில் பரிந்துரைத்து உள்ளது. இவ்வாறு செய்தால், கொரோனா என்ற நோய்த் தொற்றுக்கு எதிராக, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் என, அந்த கவுன்சில் தெரிவித்து உள்ளது.இதை, குஜராத் மாநில அரசு, வழங்கியுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களிடம், இந்த மருந்தை கொடுத்து, அவர்கள் பயன்படுத்திய போது, அவர்களில் யாருக்குமே, நோய் தொற்று ஏற்படவில்லை.


latest tamil news


இது குறித்து, குஜராத் மாநில, சுகாதாரத்துறை முதன்மை செயலர், டாக்டர் ஜெயந்தி ரவி கூறுகையில், ''கொரோனா தொற்றாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, 1,199 பேருக்கு, ஹோமியோபதி மருந்து கொடுக்கப்பட்டது. ''14 நாட்கள் தனிமை முகாம்களில் வைக்கப்பட்டிருந்த அவர்களில், 1,063 பேருக்கு, நோய்காணாமல் போயிருந்தது. இது, ஹோமியோபதி மருந்தின் மீதான நம்பிக்கையை உறுதிபடுத்தியது,'' என்றார்.
ஹோமியோபதி மருந்துகள், மிகவும் எளிமையானதும், பக்க விளைவுகள் இல்லாவை; மலிவானவை. இங்கிலாந்தில், இளவரசர் சார்லஸ் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகிய இருவரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.


'நோசோட்ஸ்'


இந்த இருவரில், வயதில் மூத்தவரான இளவரசர் சார்லஸ், ஒரே வாரத்தில் நோய் தொற்றில் இருந்து மீண்டார். ஆனால், வயதில் இளையவரான போரிஸ் ஜான்சன், கடும் போராட்டத்திற்குப் பின் மீண்டு வந்தார்.இளவரசர் சார்லஸ் மற்றும் அவரின் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வருவது, பலரும் அறிந்ததே. இவ்வாறு, ஹோமியோபதி மருத்துவம், கொரோனா வைரஸ் வருவதற்கு முன் தடுப்பதற்கும், வந்த பின், எளிமையாக குணப்படுத்துவதற்கும், பல நாடுகளில் பயன்படுகிறது. சமீபத்தில், புனே நகரிலும், அந்நகரின் போலீஸ் கமிஷனர், உடன் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும், ஹோமியோபதி மருந்தான, ஆர்சனிக் ஆல்பம் 30ஐ கொடுத்துள்ளார். அதன் பின், ஒரு காவலருக்கு கூட, கொரோனா தோற்று ஏற்படவில்லை. நவீன, ஆங்கில மருத்துவத்தில், தடுப்பு மருந்து என்று சொல்லக்கூடிய, 'வேக்சிநேஷன்' போலவே, ஹோமியோபதியிலும், 'நோசோட்ஸ்' என்ற விதிப்படி, நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்க முடியும்.


'வைராலஜிஸ்ட்'


'லெப்டோஸ்பைரோசிஸ்' என்ற எலி காய்ச்சலால், கியூபா நாட்டு மக்கள் அவதிப்பட்ட போது, அங்குள்ள ஹோமியோபதி கவுன்சில், 'லெப்டோஸ்பைரோசிஸ் நொசோட்ஸ்' மூலம் நோய்த் தொற்றை எளிதாக வென்றது. தற்போது, கொரோனா வைரசுக்கு எதிராகவும், அங்கு, நோசோட்ஸ் ரெடி செய்யப்படுகிறது. நம் நாட்டிலும், பல ஹோமியோபதி மருத்துவர்களும், 'வைராலஜிஸ்ட்' என்ற நுண்கிருமி நிபுணர்களும், இத்தகைய, நொசோட்ஸ் தடுப்பு மருந்தையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசின் தகவல்படி, கொரோனா நோய்த் தொற்று, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, அலோபதி, சித்தா, ஹோமியோபதி மருத்துவ முறைகளை பின்பற்றி, ஒருங்கிணைந்த மருத்துவம் மூலமே, இதை விரைவாகவும், எளிமையாகவும் தீர்க்க முடியும். ஒன்றுபடுவோம்; ஒருங்கிணைந்து கொரோனாவை வெல்வோம்!

டாக்டர் ஜெகதீஷ் சிவா,
டாக்டர் நந்திதா ,
டாக்டர் வெங்கடராமன்
இமெயில்: sivajags@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
16-மே-202010:26:31 IST Report Abuse
S.Baliah Seer வைத்தீஸ்வரன்கோயில் நாடி ஜோதிடர் சிவசாமி இப்படித்தான் மே மாதம் 13 -ந் தேதிக்குப்பின் கொரோனா படிப்படியாக குறையும் என்று தினமலரில் பேட்டி கொடுத்திருந்தார். கொரோனாவுக்கும் நாடி ஜோதிடத்துக்கும் என்ன சம்பந்தம் இல்லையோ அதுபோல புதிதாக தோன்றிய இந்த வைரசுக்கும் ஹோமியோபதிக்கும் துளி சம்பந்தம் கூட இல்லை.இவர்களை விட பிடல் கேஸ்ட்ரோ எவ்வளவோ மேல்.முருங்கை கீரையை உண்ணும் மக்களுக்கு தொற்று நோய் பாதிப்பு மிக குறைவு என்று எப்போதோ கூறியவர் அவர். மருத்துவ பரிசோதனைக்கு உடன்படாத எந்த மருந்தும் போலிதான். வாயால் சொல்லி கொண்டிருப்பதை விட்டுவிட்டு நிரூபித்து காமியுங்கள்.
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
16-மே-202010:02:50 IST Report Abuse
svs டுபாக்கூர் மருத்துவம் , வாட்ஸாப் மருத்துவர்கள் அல்லோபதியில் கூடத்தான் உண்டு ...எத்தனை அல்லோபதி மருந்துகள் அறிமுகப்படுத்தி பிறகு பக்க விளைவு காரணமாக மீண்டும் தடை செய்துள்ளார்கள் ....இந்த ஆண்டு கூட சில அல்லோபதி மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளது .....அவர்களுக்கெல்லாம் அந்த மருந்தை பற்றி என்ன தெரிந்தது ??.....குணமாகாமல்தான் இத்தனை கோடி மக்கள் மாற்று மருத்துவம் தேடி செல்கிறீர்களா ??.....மாற்று மருத்துவம் பற்றி தவறான பிரச்சாரம் செய்வதே அல்லோபதி மருந்து கம்பெனிகள்தான் ......லாப நோக்கில் லஞ்சம் கொடுத்தால் எதையும் விலைக்கு வாங்கலாம் .....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-மே-202004:11:29 IST Report Abuse
J.V. Iyer வாட்ஸாப் மருத்துவர்கள் தினமும் மருந்தை கண்டுபிடித்து தாராளமாக அனுப்புகின்றனர். எல்லாம் எளிமையான மருந்துகள். எல்லா வியாதிகளுக்கும் தடுப்பு மருந்து உலாவருகிறது. எட்டாவது படிக்கும் மாணவன் இரண்டு மாதங்கள் முன்னமேயே கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தான். பணத்தை செலவழித்து எதற்கு ஆராய்ச்சி?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X