பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையை பகுதிவாரியாக பிரிக்க திட்டம்: கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர சுகாதார துறை தீவிரம்

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர, சென்னையை பகுதிவாரியாக பிரித்து திட்டங்கள் தீட்டப்படுகிறது என, சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க, பகுதிவாரியாக பிரித்து திட்டங்களை செயல்படுத்த முடிவு
coronavirus, chennai coronavirus, lockdown chennai, tamil news, சென்னை, சென்னை மாநகராட்சி,  கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19, ராதாகிருஷ்ணன், மாநகராட்சிஊழியர்கள், நிதி

சென்னை: கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர, சென்னையை பகுதிவாரியாக பிரித்து திட்டங்கள் தீட்டப்படுகிறது என, சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க, பகுதிவாரியாக பிரித்து திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். பாதிப்பு அதிகம் உள்ள ராயபுரம் மண்டலத்திற்கு தனித்திட்டம் உள்ளது. ராயபுரத்தில் நோய் பாதிப்பு அதிகம் உள்ள 10 பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்களுக்கு சத்தான உணவுகளை வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க திட்டம் உள்ளது.

கோயம்பேடு தொடர்பு காரணமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிக பாதிப்பு உள்ளது. பொது மக்கள் அச்சப்படாமல், விழிப்புடன் செயல்பட்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாட்டிலேயே சென்னையில் தான் அதிகளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் 50 லட்சம் மாஸ்க்குகள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.6, 7 பாதிப்பு மண்டலங்களில குறைய துவங்கியது. தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டையில் தொற்று கட்டுக்குள் வந்தது.

65 வார்டுகளில் 10க்கும் குறைவாக பாதிப்பு உள்ளது. மற்ற வார்டுகளில் 30க்கும் குறைவாக உள்ளது. போலீசார் மற்றும் வருவாய்த்துறை மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் நோய் தெற்று எங்கிருநது வந்தது? எப்படி வந்தது? என ஆய்வு நடக்கிறது. அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை சமுதாய கூடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருநதுகளை வழங்கி வருகிறோம். கொரோனா நோய் அல்ல. இது ஒரு வைரஸ்.மக்கள் கூடும் இடங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னையில் மட்டும் 5,637 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news
latest tamil newsசென்னை அடையாறில் உள்ள மருதம் இல்லத்தில் 2 கமாண்டோ படை வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.


ரூ.5.59 கோடி அபராதம்


இதனிடையே ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறியதாக 4,73,606 பேர் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 4,46, 633 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 3,90,562 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 5.59 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


மாநகராட்சி ஊழியர்களுக்கு நிதி


சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட போது கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் 34 பேருக்கு கருணை அடிப்படையில் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டில் இன்று மேலும் 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 451 ஆக அதிகரித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் 84 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
15-மே-202017:24:18 IST Report Abuse
Natarajan Ramasamy இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். முகத்தில் மீசையோ. தாடியோ வைப்பது கிருமியை சேகரித்து வைக்க வழிசெய்யதா ? மழித்தல் நல்லது என்று தோன்றுகிறது. சோப்பு போட்டு கழுவதற்கு உகந்தது.
Rate this:
Raj - Chennai,இந்தியா
15-மே-202019:17:51 IST Report Abuse
Rajதலையில் உள்ள முடி மூலம் மட்டும் பரவாதா?...
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
15-மே-202015:27:06 IST Report Abuse
sundarsvpr பாரத ரத்தினம் எம் ஜி ராமச்சந்திரன் சொன்னது போல் திருச்சியை கூடுதல் மாநில தலைநகராய் மாற்றியிருந்தால் கொரோனா பாதிப்பு எச்சரிக்கை நிலைக்கு வந்திருக்காது. இது சரியான நேரம் நல்ல முடிவு காண.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
15-மே-202015:15:28 IST Report Abuse
S. Narayanan சீக்கிரம் கொரோனவா விரட்டுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X