உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு| SC dismisses plea for closure of liquor shops | Dinamalar

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (95)
Share
புதுடில்லி: தமிழக மதுக்கடைகள் திறப்புக்கு சென்னை ஐகோர்ட் விதித்த தடைக்கு, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இது போல் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்த நபர் ஒருவருக்கு ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகள் தமிழகத்தில் கடந்த 7ம் தேதி, திறக்கப்பட்டது. மதுக்கடைகளில் நீதிமன்ற நிபந்தனைகள்

புதுடில்லி: தமிழக மதுக்கடைகள் திறப்புக்கு சென்னை ஐகோர்ட் விதித்த தடைக்கு, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இது போல் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்த நபர் ஒருவருக்கு ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகள் தமிழகத்தில் கடந்த 7ம் தேதி, திறக்கப்பட்டது. மதுக்கடைகளில் நீதிமன்ற நிபந்தனைகள் பின்பற்றப்படாததால், அவற்றை மூடும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இன்று (15 ம் தேதி ) விசாரணை நடந்தது. இந்த விசாரணயைில் ஆன்லைனில் மது விற்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. இருப்பினும் அரசு கொள்கை முடிவில் கோர்ட் தலையிடுவது சரியல்ல. இதனால் சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது .
வழக்கை விசாரித் நீதிபதிகள் சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்தனர். இதனால் ஒரி நாட்களில் மதுக்கடைகள் திறக்கப்படும் என தெரிகிறது.
இது தொடர்பான மற்றொரு மனு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்சும் விசாரித்து வருகிறது. இந்த மனுவில் இன்றைய விசாரணையில் சுப்ரீம் கோர்ட் தடை குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பது உகந்தது அல்ல என்று நீதிபதிகள் எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் வழக்கை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.


மனு போட்ட ஒருவருக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம்
latest tamil newsஇது போல் கவுதம்சிங் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவில்; கொரோனா தொற்று இருப்பதால் மதுக்கடைகளில் சமூக விலகலை யாரும் கடைப்பிடிக்கவில்லை . இதனால் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்; இந்த மனு விசாரணைக்கு ஏற்றது அல்ல. இது தொடர்பாக அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும். இது பொதுநல வழக்கு அல்ல. இந்த மனுவை தாக்கல் செய்த நபருக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிப்பதுடன், இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


latest tamil news


நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு, நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கடை இயங்காது. கடைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சென்னை காவல்துறை எல்லை, திருவளளூர் மாவட்ட எல்லைகளில் டாஸ்மாக் இயங்காது . இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு , டாஸ் மாக் அறிவிப்புநாளை (16 ம் தேதி) முதல் டாஸ்மாக் திறக்கப்பட உள்ளதை அடுத்து தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி டாஸ் மாக் கடைகளில் மது வாங்குவதற்கு ஆதார் கார்டு கட்டாயமில்லை. மேலும் ஒருவர் எவ்வளவு மது வேண்டுமானாலும் வாங்கிச்செல்லலாம் என தமிழக அரசு மற்றும் டாஸ் மாக் அறிவித்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X