தமிழக தலைமைச் செயலாளர் ‛‛தலை''யை உருட்டும் அரசியல்வாதிகள்

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (99) | |
Advertisement
சென்னை: தலைமை செயலாளர் சண்முகம், தாங்கள் சொல்வதை கேட்கவில்லை என திமுக எம்பி.,க்கள் புகார் கடிதம் வாசிக்க, திமுக எம்பிகள் அவதூறு பரப்பி அதிகாரிகளை குழப்பி வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.சில நாட்களுக்கு முன்பு தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தை சந்திக்க திமுக எம்.பி.,க்கள் சென்றனர். ஆனால் தலைமைச் செயலாளர் தங்களை கண்டுகொள்ளவில்லை,
தலைமை_செயலாளர், சண்முகம், திமுக, எம்பிகள், அமைச்சர், ஜெயக்குமார்

சென்னை: தலைமை செயலாளர் சண்முகம், தாங்கள் சொல்வதை கேட்கவில்லை என திமுக எம்பி.,க்கள் புகார் கடிதம் வாசிக்க, திமுக எம்பிகள் அவதூறு பரப்பி அதிகாரிகளை குழப்பி வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தை சந்திக்க திமுக எம்.பி.,க்கள் சென்றனர். ஆனால் தலைமைச் செயலாளர் தங்களை கண்டுகொள்ளவில்லை, தாங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்கவில்லை. நாங்கள் பேசும்போது டிவி சத்தத்தை அதிகப்படுத்தினார் என புகார் கூறினர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சண்முகம், ‛‛தி.மு.க. எம்.பி.க்கள் 10 முதல் 20 நபர்கள் வரை மனுக்கள் அடங்கிய கட்டுகளை எடுத்து வந்தனர்; போட்டோ, வீடியோ எடுத்தனர். கொரோனா நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில் இத்தனை பேர் அறைக்குள் வந்தது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.


latest tamil news


அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு லட்சம் மனுக்களை ஒப்படைப்பதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுப்பதாக கூறினேன். எத்தனை நாட்களுக்குள் அலுவலர்களுக்கு மனுக்களை அனுப்புவீர்கள்' என கேட்டனர்; தேதியை உறுதியாக கூற இயலாது என்றேன்.

அப்போது டி.ஆர்.பாலு 'பணியாளர்கள் குறைவாக உள்ளதால் தேதியை உறுதியாக கூற முடியாது என தலைமை செயலர் சொன்னார் என செய்தியாளர்களிடம் கூறவா' என கேட்டார். ‛இது தான் உங்களிடம் உள்ள பிரச்னை; எங்களின் சங்கடங்களை புரிந்து கொள்வதில்லை' என்றேன். அவர்களை அவமதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை. தலைமை செயலருக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லாதது போல டி.ஆர்.பாலு கருத்து தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது. தற்போதுள்ள நிலையை நன்கு அறிந்தவர்கள் இப்படி திரித்து பேசுவது மன வேதனையை அளிக்கிறது. உண்மையை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் மக்களும் புரிந்து கொள்வர்,'' என கூறினார்.


latest tamil news


இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நேர்மையாக செயல்படும் ஜென்டில்மேன் தலைமைச் செயலாளர் சண்முகம் மனதை திமுக கஷ்டப்படுத்தி உள்ளது. மோதுவதாக இருந்தால் தமிழக அரசுடன் மட்டுமே மோத வேண்டும், அதிகாரிகளை மிரட்டும் செயலில் திமுக ஈடுபடக்கூடாது. அரசு இயந்திரத்தை திறம்பட செயல்பட வைக்கும் அதிகாரிகளை குழப்பி, ஆட்டம் காண வைக்கும் செயலில் திமுக திட்டமிட்டு சதி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
20-மே-202017:26:12 IST Report Abuse
Chakkaravarthi Sk Please ask the people who use fancy names while posting comments. They should use original names as long as they have integrity and conscience about what they write. I see specifically some persons using funny names to inform us they are revolutionaries. A person comments someone should have the courage to do it ly. unfortunately all negative oriented persons use the social media and such comments to promote ill will against someone or a group of persons. I request the moderator to check such comments and avoid publishing such comments originating from unreliable sources and masked persons
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
19-மே-202005:27:49 IST Report Abuse
meenakshisundaram அரசாங்க அதிகாரிகளில் சிலர் எதிர்க்கட்சிகளின் ஒற்றர்களாக இருக்கலாம் ,ஆனால் அவர்கள் இவர்களுக்கு ஊழியம் செய்ய மாட்டார்கள் .அவசியமும் இல்லை ,அதிகாரிகள் எதிர்க்கட்சிகளின் உதிரிகளுக்கு ஸலாம் போடணுமா? இவங்க செய்ய வேண்டியதே முறையாக அனுமதி பெற்று முதலமைச்சரிடம் அந்த மனுக்களை (குப்பையை) கொடுத்திருக்க வேண்டும்.அதிகாரம் ஆளும் கட்சிக்கே உண்டு ,எதிர்க்கட்சிகள் ஆளும் காட்சியைப்போல பேசுவதுவும் கருத்துக்களை திணிக்க முயல்வதும் அதிகார பேராசையே
Rate this:
Cancel
SRITHAR MADHAVAN - Bangalore,இந்தியா
18-மே-202014:27:06 IST Report Abuse
SRITHAR MADHAVAN ஷண்முகம் சார் எதிர்கட்சியா இருக்கட்டும், ஆளும் காட்சியகட்டும் , பயப்படாதீர்கள். நீங்கள் மட்டும்தான் பெர்மனெண்ட். அவர்களிலெல்லாம் zero. All the best.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X