பொது செய்தி

இந்தியா

800 சிறப்பு ரயில்களில் 10 லட்சம் தொழிலாளர் பயணம்: ரயில்வே

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Railway, Shramik Special Train, Migrants, corona, coronavirus, covid-19, corona crisis, migrant labourers, india fights corona, புலம்பெயர்ந்த, தொழிலாளர்கள், ரயில், ரயில்வே, சிறப்புரயில், பயணம்

புதுடில்லி: நாடு முழுவதும் இயக்கப்பட்ட 800 சிறப்பு ரயில்கள் மூலம் 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை, சொந்த மாநிலத்திற்கு அழைத்து சென்று ரயில்வே சாதனை படைத்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு திரும்ப மத்திய அரசு அனுமதி அளித்தது. புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப வசதியாக மே 1 முதல் ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று (மே 14) வரை மொத்தம் 800 ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் மூலம் 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.


latest tamil news


இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திரா, பீஹார், சட்டீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா, மணிப்பூர், மிஸோரம், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட், மே.வங்கம் ஆகிய மாநிலங்களில் 800 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பும் மற்றும் அவர்களை திரும்ப பெறும் இருமாநிலங்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.


latest tamil news


ரயில் பயணத்திற்கு முன் தொழிலாளர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பயணம் செய்த அனைத்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டது. முன்னர் எந்த இடைநிறுத்தமும் இன்றி ஒரு ரயிலில் 1,200 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, மே 11 முதல் 1,700 தொழிலாளர்கள் வரை செல்லவும், 3 ரயில்நிலையங்கள் வரை நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஒருமுறை ரயில் இயக்குவதற்கு ரூ.80 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் பயணச் செலவில், 85 சதவீதம் மத்திய அரசும், மீதியை, மாநில அரசுகளும் ஏற்றுக் கொள்ளுமென உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. ஷ்ரமிக் சிறப்பு ரயில் சேவை துவங்கியதில் இருந்து அதிக ரயில் சேவை துவங்கிய மாநிலங்களில் குஜராத் முதலிடத்திலும், கேரளா 2வது இடத்திலும் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
15-மே-202018:59:35 IST Report Abuse
Sundar Outstanding efforts.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-மே-202016:51:26 IST Report Abuse
Bhaskaran தனஉறவினரை மாட்டு வண்டியில் ஒருபக்க மாடாக இருந்து இழுத்து சென்ற வரும் தொழிலாளி தான் .தன கற்பிணி மனைவியை தள்ளுவண்டியில்வைத்து இழுத்து சென்றவரும் தொழிலாளிதான் .இந்த வயிற்றெரிச்சல் .ஆட்சியாளர்களுக்கு தெரியலையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X