பொது செய்தி

தமிழ்நாடு

நாளை உருவாகிறது 'ஆம்பன்' புயல்!

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Storm, Weather, imd, weather update, south-east Bengal, Meteorological Department, Bay of Bengal, Arabian Sea, புயல்,மழை,வானிலை, ஆம்பன்புயல்,

சென்னை: தென் கிழக்கு வங்க கடலில் 'ஆம்பன்' புயல் நாளை( மே 16) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது: தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் 'ஆம்பன்' புயல் நாளை உருவாக வாய்ப்பு உள்ளது. அதே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். 17 வரை வடமேற்கு திசையிலும், அதன் பிறகு வடகிழக்கு திசையிலும் புயல் நகர வாய்ப்பு உள்ளது. இந்த புயலால், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈர்ப்பால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 'ஆம்பன்' புயலால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும்.


latest tamil news


காற்று பலமாக வீசும் என்பதால், வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தெற்கு மத்திய வங்க கடல், லட்சத்தீவு, குமரி கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sami Sam - chidambaram ,இந்தியா
15-மே-202017:27:17 IST Report Abuse
Sami Sam தமிழ் நாட்டிற்கும் கொஞ்சம் மழை கொடுத்தால் நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X