சீனாவில் ஒரு மாதமாக கொரோனா இறப்பு இல்லை

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
China, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases worldwide, corona update, covid 19 pandemic, worldwide crisis, No Deaths, சீனா, கொரோனா, வைரஸ், ஒரு மாதம், இறப்பு, பதிவில்லை

பெய்ஜிங்: சீனாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பு எதுவும் பதிவாகவில்லை.

கடந்தாண்டு சீனாவின் வூஹானில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் உயிரை இழந்துள்ளனர். சீனாவில் கொரோனா தொற்றுக்கு 82,933 பேர் பாதிக்கப்பட்டு, 4,633 பேர் பலியாகினர். தேசிய சுகாதார கமிஷன் வெளியிட்ட தகவலின்படி, வடகிழக்கு மாகாணமான ஜிலினில் உள்ளூர் பரவல் காரணமாக வெள்ளியன்று புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடைசியாக ஏப்.14ம் தேதி கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு, கடந்த ஒரு மாதமாக கொரோனா இறப்பு பதிவாகவில்லை.


latest tamil news


சமீபத்தில் கொரோனா அறிகுறி இல்லாமல் தொற்றால் பாதிக்கப்பட்ட 11 பேர் உட்பட 623 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். 91 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றின் பிடியில் சிக்கியுள்ள உலக நாடுகள் பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மையை எதிர்கொள்ள திணறி வரும் நிலையில், சீனா சமூக இடைவெளியை பின்பற்றி மிகப்பெரிய தொழிற்சாலைகளை திறக்க அனுமதியளித்ததுடன், பள்ளிகள், வணிக நிறுவனங்களை திறந்து, மக்களின் இயல்வு வாழ்க்கை திரும்புவதற்கு தேவையான பொருளாதார நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
16-மே-202012:42:31 IST Report Abuse
ocean kadappa india சீனர்கள் மிகவும். நாகரிகமானவர்களா.ஐயைய்யோ ஐய்யையோ வெட்கம் அசிங்கம்.
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
15-மே-202021:27:26 IST Report Abuse
s.rajagopalan அவிங்க சொல்றதை கேட்டுக்கிற வேம்படியாதுதான் ...வேறு வழி ?நல்லா கிளப்புறாங்கய்யா பீதி
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
15-மே-202021:16:27 IST Report Abuse
kumzi நீ செத்தா சாம்பலான லிஸ்ட்டுல சேர்ந்திருப்ப ஹீஹீஹீ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X