பொது செய்தி

தமிழ்நாடு

கோவை டூ ஒடிசா சிறப்பு ரயில்; 1,464 வடமாநில தொழிலாளர் பயணம்

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

கோவை: கோவை மாவட்டத்தில் அதிகளவிலான தொழில் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் மில்களும், செங்கல் சூளைகளும் உள்ளன. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு, வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், இவர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவித்தனர்.



latest tamil news




இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தனர். இதில் முன்னுரிமை அடிப்படையில், 1,464 பேர் இன்று காலை 9:45 மணிக்கு, கோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட, ஷ்ரமிக் சிறப்பு ரயிலில், ஒடிசாவில் உள்ள பாலாசூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ரயிலில் ஏறுவதற்கு முன், பயணிகள் அனைவருக்கும் கொரோனா தொற்று அறிகுறி இருக்கிறதா என்ற சோதனை நடத்தப்பட்டது.


latest tamil news




அதேபோல், சென்னை மத்திய ரயில் நிலையத்தில் இருந்து, இன்று காலை 6:35 மணிக்கு புறப்பட்ட, புதுதில்லி செல்லும் ராஜதானி சிறப்பு ரயிலில், 950 பயணிகள் சென்றனர். அவர்களுக்கும் கொரோனா தொற்று அறிகுறி இருக்கிறதா என்ற சோதனை நடத்தப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Santhosh - Vellore,இந்தியா
15-மே-202018:27:24 IST Report Abuse
Santhosh காட்பாடி mudhal jarkhand வரை இன்று மேலும் ஒரு ரயில் 1437 பயணிகளுடன் சென்றது. இது 6th ரயில்.
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
15-மே-202015:43:40 IST Report Abuse
s vinayak நெஞ்சை நிமிர்த்தி பேசும் வாய்ச்சொல் தமிழர்கள் இந்த வெளி மாநில தொழிலாளர் விட்டுச் சென்ற பணியை செய்ய யார் வருகிறார்கள்? என்று பார்க்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X