ஜூன் மாதத்திற்குள் லண்டனில் கொரோனாவை அழிக்க முடியும்

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
London, Virus Free, No New Cases, Coronavirus,  UK's capital city, லண்டன், கொரோனா, வைரஸ், அழிக்கமுடியும், ஆய்வு

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாள் ஒன்றுக்கு 24 பேருக்கும் குறைவானவர்களே கொரோனா தொற்றுக்கு ஆளாவதால், ஜூன் மாதத்திற்குள் கொரோனாவை அழிக்க முடியும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இங்கிலாந்தில் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரதம் பேர் பாதிக்கப்பட்டு, 33 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இது குறித்த ஆய்வினை, இங்கிலாந்து பொது சுகாதாரம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலை., இணைந்து ஆய்வு நடத்தியது. ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:


latest tamil newsலண்டனில் ஒரு நாளைக்கு 24 பேருக்கும் குறைவானவர்களே புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றனர். புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு 3.5 நாட்களுக்கும் பாதியாக குறைகிறது. ஆரம்பக்கட்டத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட லண்டனில், தற்போது மீண்டு, பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் முன்னிலையில் உள்ளது. லண்டனில் உள்ள கிட்டத்தட்ட 15 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்ததால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. இதனால் அவர்களுக்கு மீண்டும் வைரஸ் பரவுவது கடினம்.


latest tamil news


மேலும், பலர் வீடுகளில் இருந்தே பணி புரிவதால், வீட்டிலேயே தனிமைபடுத்தலை மேற்கொள்கின்றனர். இதுவும் கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டதற்கான காரணமாக கருதப்படுகிறது. இப்படியாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையும் பட்சத்தில், ஜூன் மாதத்திற்குள் கொரோனாவை அழிக்க முடியும். இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதிகளில் ஒவ்வொரு நாளும் 4 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tshajahan - Vellore,இந்தியா
15-மே-202015:53:06 IST Report Abuse
tshajahan For the past 300 years England is the classic example bff or the test of the world in modernized education and in lot of scientific inventions. Now again they are leading example to completely control CORONAVIRUS. Even after indepence from UK we need to learn a lot.
Rate this:
Cancel
தியாகி சுடலை மன்றம் எங்க சுடலை அடிக்கடி லண்டன் வருவார் கொரோனா அவரை தாக்கினால் கொரோனா அழிந்து விடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X