சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆழியாறு ஆற்றில் மூழ்கி தாய், 2 மகள்கள் பலி

Added : மே 15, 2020
Share
Advertisement

ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே, ஆழியாறு ஆற்றில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு மகள்கள் பரிதாபமாக இறந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள், 40; சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவன் சுப்ரமணி 10 ஆண்டுக்கு முன்பு விபத்தில் பலியானார். இவரது மகள்கள் சந்தியா, 18, சத்தியா, 15.

கண்ணம்மா மகள்களுடன் ஆனைமலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு, 12ம் தேதி வந்துள்ளனர்.
இன்று (15ம் தேதி) மதியம் மூவரும் அப்பகுதியில் உள்ள ஆழியாறு ஆற்றில் துணி துவைக்கச் சென்றனர். அப்போது, சந்தியா ஆற்றுநீரில் மூழ்கினார். சத்தியா மற்றும் கண்ணம்மாள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். நீச்சல் தெரியாததால் மூவரும் ஆற்றுநீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். போலீசார், விவசாயிகள் மூவரின் சடலத்தை மீட்டனர். ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர். ஒரே குடும்பத்தில் மூவர் இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X