ஊரடங்கின்போது அமெரிக்கர்கள் ஏன் சலூனை மிகவும் மிஸ் செய்கிறார்கள் தெரியுமா?

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
America, Salons, Lockdown, Hair Salons, corona, coronavirus, covid-19, corona in us, corona update, coronavirus update, அமெரிக்கா, சலூன், ஊரடங்கு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் முக்கியமாக பாதிக்கப்பட்ட தொழில்களில் ஹேர் டிரஸிங்கும் ஒன்று. அந்நாட்டு ஹேர் ஸ்டைலிஸ்டுகள் பேஷன் துறை மூலம் அதிக லாபம் ஈட்டி வந்தனர்.

அட்லாண்டா, மிச்சிகன் உள்ளிட்ட பகுதிகளில் ஹேர் டிரஸர்கள், டையிங், பேஷன் டிசைனிங் உள்ளிட்ட துறைகளில் அதிக லாபம் ஈட்டி வந்தனர். பிரபல பேஷன் ஷோக்களில் கலந்துகொள்ளும் மாடல்கள் முதல் சாதாரண வாடிக்கையாளர்கள் வரை பல விதமானவர்களுக்கு முடி, தாடி டிரிம்மிங் செய்துவந்த இவர்கள் தற்போது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகளில் சலூன்கள் முடிவெட்டிக்கொள்ளச் செல்லும் சாதாரண இடங்கள்போல் அல்லாமல், கலாசாரத்தை பிரதிபலிக்கும் இடமாகவே பார்க்கப்படுகிறது. இங்கு கருப்பினத்தைச் சேர்ந்த ராப்பர்கள் வந்து இசைக்கச்சேரி நடத்துவர். ஹேர்கட் செய்ய மட்டுமல்லாமல் இங்கு பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் அமெரிக்கர்கள் செல்லுவர்.


latest tamil news


கிளாஸிக்கல் குழு நடனங்கள், ஆடல் பாடல்கள் நடைபெறும். ஆனால் தற்போது சமூக விலகலைப் பின்பற்றி ஆன்லைனில் புக் செய்து முடி வெட்டிக்கொள்ள வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் ஹேர் சலூன்களுக்கு இவ்வாறான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஆகவே இங்கு சலூன்களுக்குச் செல்லாமல் இருப்பது பெரிய விஷயமாகத் தெரிவதில்லை. ஆனால் மேலை நாடுகளில் குடிமக்களுக்கு சலூன்கள் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகவே விளங்குவதால் அங்கு கொரோனா தாக்கம் காரணமாக அவை மூடப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


சினிமா, டிராமா, பீச், பார்க் என வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் சுற்றலா செல்ல குடிமக்கள் விரும்புவதுபோல சலூன்களுக்குச் செல்லவும் மேலை நாட்டவர்கள் ஆர்வம் காட்டுவர். தற்போது இதர பொழுதுபோக்கு அம்சங்களைக் காட்டிலும் சலூன்களுக்குச் செல்லமுடியாததை அமெரிக்கர்கள் வருத்தத்துக்கு உள்ளான விஷயமாக நினைக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
18-மே-202019:28:11 IST Report Abuse
Ray 1975 லிருந்து காரைக்கால் தஞ்சை திருச்சி சென்னை என உத்யோகம் இடம் மாறியபோதும் தஞ்சையில் ஒரே கடையில் முடிவெட்டிக் கொள்ள தவறாமல் சென்றவன் நான் ஹூம் கடந்த பத்து ஆண்டுகளாக அது கிடைக்காமல் போனது இருந்தாலும் தஞ்சை சென்றால் நம்மாளை பார்க்காமல் வருவதில்லை ஒருமுறை சென்று பார்த்தார்களானால் நம் சென்னை எவ்வளவு பின்தங்கியுள்ளதென்று தெரிந்து கொள்ளலாம்
Rate this:
Cancel
ரஞ்சித் - madurai,இந்தியா
15-மே-202020:25:15 IST Report Abuse
ரஞ்சித் நான்கூட ரெண்டு மாசமா முடி வெட்ட முடியாம தவிச்சுட்டிருக்கேன், அதையும் போடுங்க.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
15-மே-202017:44:44 IST Report Abuse
வெகுளி நியூ குமார் ஸ்டைலிங்க்ல இப்பதான் ஏ சி வந்திருக்கு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X