சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மலையேற்ற வீரர்களுக்கான சிகிச்சை பலன் தருமா?

Added : மே 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மலையேற்ற வீரர்களுக்கான சிகிச்சை பலன் தருமா?

கொரோனா வைரஸ் நுரையீரலில் ஏற்படுத்தும் பாதிப்புகளும், எவரெஸ்ட் போன்ற சிகரங்களில் ஏறுவோருக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் அறிகுறிகளும் ஒத்திருப்பதாக அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் பொது மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

மிக உயரமான மலைகளில் ஆக்சிஜன் குறைவாக இருப்பதால், மலையேறுவோருக்கு சிகிச்சையாக 'நைட்ரிக் ஆக்சைடு' தரப்படுவது வழக்கம்.இதை, கொரோனா வைரஸ்கள் ஆக்கிரமித்து, ஆக்சிஜன் ரத்தத்தில் குறைவாக கலக்கும் நோயாளிகளுக்கு கொடுத்தால், அவர்களால் சீக்கிரம் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வெளியே வரமுடியும்.

எனவே, மாசாசூசெட்ஸ் மருத்துவமனையில் தற்போது அதற்கான சோதனைகள் துவங்கியுள்ளன.இந்த சோதனை வெற்றி பெற்றால், கொரோனா தீவிர சிகிச்சை முறையில் ஒரு பெரிய புரட்சி ஏற்படும். மிக எளிய சிகிச்சை, பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-மே-202008:43:53 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் ரத்தத்தில் இருக்கும் 'நைட்ரிக் ஆக்சைடு' நுரையீரலில் ஆக்சிஜனை கிரகித்துக் கொள்ளும். இது மலையேற்றம் (ஆக்சிஜன் குறைவான பகுதி) மற்றும் நீள் தொடர் ஓட்டம் (மாரத்தான்), மற்றும் அதிதீவிர உடற்பயிற்சி செய்பவர்கள் மாத்திரையாக சாப்பிடுவார்கள். அதிக அளவு நைட்ரிக் ஆக்ஸைடு ரத்தத்தில் இருந்தால் ஆக்சிசனை அதிகம் அதிகம் கிரகித்து கொள்ளும் என்று "நைட்ரிக் ஆக்சைட்" சப்ளிமெண்டரி விற்பவர்கள் சொல்லி விற்பார்கள். மருத்துவரீதியாக இது அதிகம் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், பைத்தியங்கள் சொன்ன ஹைட்ராக்சிகுளோரோக்குவின் என்ற விஷத்தை காட்டிலும் நல்ல பலன் தரும் என்றே தோன்றுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X