பொது செய்தி

இந்தியா

வேளாண்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி: நிர்மலா சீதாராமன்

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி:கொள்முதல் நிலையங்கள், குளிர்பதன கிடங்குகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.தன்னிறைவு இந்திய திட்டத்தில் 3வது கட்ட சலுகைகளை அறிவித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: தன்னிறைவு திட்டத்தில் இன்று 11 அறிவிப்புகள் வெளியாகின்றன. அதில், 8 விவசாய துறையை உள்கட்டமைப்பு
BJP, Nirmala, Nirmala Sitharaman, corona, coronavirus, covid-19, economic package, stimulus package, Finance Minister, நிர்மலா,நிர்மலா சீதாராமன்

புதுடில்லி:கொள்முதல் நிலையங்கள், குளிர்பதன கிடங்குகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தன்னிறைவு இந்திய திட்டத்தில் 3வது கட்ட சலுகைகளை அறிவித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: தன்னிறைவு திட்டத்தில் இன்று 11 அறிவிப்புகள் வெளியாகின்றன. அதில், 8 விவசாய துறையை உள்கட்டமைப்பு சார்ந்ததாக இருக்கும். மற்ற 3 திட்டங்கள் விவசாய துறைக்கான அரசு முறைகளின் மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலானோர் விவசாய துறையை சார்ந்துள்ளனர். சணல் பருப்பு உற்பத்தியில் தொடர்ந்து இந்தியா முன்னிலையில் உள்ளது.

நமது விவசாயிகள் அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் விவசாயிகளுக்காக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இக்கட்டான சூழ்நிலையிலும் ரபி அறுவடையை விவசாயிகள் வெற்றிகரமாக முடித்துள்ளனர். ஊரடங்கின் போது உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதற்காக ரூ.74,300 கோடி வழங்கப்பட்டுள்ளது.


latest tamil newsபீமயோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.6,400 கோடி நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளது.விவசாயிகளிடம் 560 லட்சம்லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.பிரதமர் கிசான் நிதி திட்டத்தில் ரூ.ரூ.18700 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கொள்முதல் நிலைய உள்கட்டமைப்புக்கு மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் குளிர்பதன வசதிகள் மற்றும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும். விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஆரம்ப நிலைத் தொடர் நிலையங்கள் போன்றவற்றுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் என்று சொல்லி  தலை நிமிர்வோம் “சிறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் அடுத்த வாரத்துக்குள் தராத நிலை ஏற்பட்டால்கூட அந்த நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் மத்திய அரசு, மாநில அரசுகள் சார்பில் எடுக்கக்கூடாது. சிறு நிறுவனங்கள் போதுமான வருவாய் ஈட்டாத நிலையில் அவர்களால் ஊதியம் வழங்க இயலாது.பெரும்பாலான சிறு நிறுவனங்கள் உற்பத்தி இல்லாமல் 15 நாட்கள் வரை மட்டுமே தாங்கும் சக்தியுள்ளதாக இருக்கின்றன. ஆனால், லாக்டவுனில் 40 நாட்களுக்கும் மேலாக உற்பத்தி நடக்காமல் இருந்தால் எவ்வாறு அவர்களால் ஊதியம் வழங்க இயலும். இப்படி அடுத்த இடி
Rate this:
Cancel
தமிழன் என்று சொல்லி  தலை நிமிர்வோம் ‘ஆபத்துக்கு உதவாப் பிள்ளை, அரும்பசிக்கு உதவா அன்னம்’ போன்ற நடவடிக்கை: பகட்டு அறிவிப்புகள் வேண்டாம்: நிதியமைச்சருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
15-மே-202019:34:17 IST Report Abuse
Sivagiri விவசாயிகளுக்கு கடனாளி ஆக்காமல் விளைபொருள்களை பொருள்களுக்கு ஏற்ப விதைக்கும் போதே 50 சதவீதம் அட்வான்ஸும் - மீதி முழுத் தொகை அவர் இடத்திற்கே சென்று எடை போட்டு கொள்முதல் செய்து வங்கிக் கணக்கில் கொடுக்கப்பட வேண்டும் . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X