பொது செய்தி

இந்தியா

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலிருந்து வெங்காயம், உருளை நீக்கம்

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு நீக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.டில்லியில் நிருபர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:*மீன்பிடி உள்கட்டமைப்பை மேம்படுத்த 9 ஆயிரம் கோடி*கடல் உள்நாட்டு மீன்பிடிப்பு பண்ணை மீன் வளர்ப்பை
நெல், கோதுமை, அத்தியாவசிய சட்டம், நிர்மலா, நிர்மலாசீதாராமன், Finance Minister, agricultural sector, corona, coronavirus, covid-19, relief package, Nirmala Sitharaman, fisheries sector, agriculture,

புதுடில்லி: அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு நீக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நிருபர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
*மீன்பிடி உள்கட்டமைப்பை மேம்படுத்த 9 ஆயிரம் கோடி
*கடல் உள்நாட்டு மீன்பிடிப்பு பண்ணை மீன் வளர்ப்பை ஊக்குவிக்க 11 ஆயிரம் கோடி
*புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால், அடுத்த 5 ஆண்டுகளில் 70 லட்சம் டன் மீன்கள் உற்பத்தி வழி செய்யப்படும். 55 லட்சம் பேருக்கு வேலை
*மீன்வளத்துறை மேம்படுத்த பிரதமரின் மீன்வளத்திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் கோடி
* மீன்பிடி வர்த்தகத்தை ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டம்
*இறால் இறக்குமதிக்கான அனுமதி 3 மாதம் நீட்டிப்பு

*கூடுதலாக 70 லட்சம் மீன் உற்பத்தியை எட்ட அரசு இலக்கு


கால்நடைத்துறை

*கால்நடைதுறைக்கு தடுப்பு மருந்து திட்டத்திற்கு ரூ. 13, 343 கோடி
*53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
*ரூ.15 ஆயிரம் கோடியில் கால்நடை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உருவாக்கப்படும்

*கால்நடைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த அனைத்து விதமான கால்நடைகளுக்கும் 100 சதவீதம் தடுப்பு மருந்து போடபப்படும். 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

*கால்நடைகளுக்கு அடிக்கடி ஏற்படும் வாய் மற்றும் கால் சார்ந்த நோய்களை தடுக்கும் வகையில் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது.
latest tamil news*பால் பால்பொருட்கள் உள்கட்டமைப்பு 15 ஆயிரம் கோடி

* பால்பொருட்கள், சீஸ் உள்ளிட்டவற்றின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

* பால் உற்பத்தி துறையில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளது.பால் நெய் உற்பத்தி மற்றும் பால் சார்ந்த பொருள் உற்பத்தி இதன் மூலம் அதிகரிக்கும்.

*பால், வெண்ணெய் போன்ற பால் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.*2.25 லட்சம் ஹெக்டேரில் மருத்துவ மூலிகை பயிர்களின் சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

*இதன் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட முடியும்.

*தேனீ வளர்ப்பு திட்டங்களை ஊக்குவிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு. தேனீ வளர்ப்பின் உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

*இதனால் 2 லட்சம் தேன் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள்.

* வெங்காயம், உருளை, தக்காளிக்கு செயல்படுத்தப்படும் ஆபரேசன் கிரீன்ஸ் அனைத்து காய்கறிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
* விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். இருப்பு வைத்து கொள்ளும் பொருளுக்கு கட்டுப்பாடு இருக்காது.
*வேளாண் பொருட்களின் விநியோக சங்கிலியை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு
*டிஜிட்டல் முறையில் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை. இதற்காக சட்டம் கொண்டு வரப்படும்.
* மாநிலங்களுக்கு இடையே பொருட்களின் தடையற்ற வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும்

* உணவு பொருட்களை ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடு இருக்காது

*அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு நீக்கப்படும்.

*நெல், கோதுமை, வெங்காயம் போன்றவற்றை எந்தளவுக்கு வேண்டுமானாலும் இருப்பு வைத்து கொள்ளலாம்.

* வெங்காயம், தக்காளி, பருப்புகள், எண்ணெய் வகைகள் போன்றவற்றின் விலைகளில் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. இந்த பொருட்கள் இருப்பு வைப்பதற்கான அதிகபட்ச வரம்பு தளர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-மே-202007:52:51 IST Report Abuse
Bhaskaran Patrao kurai erpadum pothu evvalavu vendum aanaalum pathukikolvaargale
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
15-மே-202022:48:48 IST Report Abuse
தல புராணம் //அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து வெங்காயம், உருளை கிழங்கு நீக்கப்படும்// ஏற்றுமதி பண்ணி டாலர் கொட்டும்.. விவசாயி வருமானம் ரெட்டிப்பாக போகுது டோய்..
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
15-மே-202020:47:18 IST Report Abuse
Loganathan Kuttuva விவசாய பொருட்களை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு செல்வதற்கு சரக்கு ரயில் வசதியை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X